இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

10:52 PM (IST) Dec 01
Chamundeshwari Stopped Kumbabishekam : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் சாமூண்டீஸ்வரி கும்பாபிஷேகத்தை நிறுத்திவிட்டு தனது மகள்களை கையோடு அழைத்து சென்றுவிட்டார்.
10:44 PM (IST) Dec 01
Top 5 Actresses 2nd Marriage : பாலிவுட் நட்சத்திரங்களின் இரண்டாவது திருமணம்: சமந்தா ரூத் பிரபு, இயக்குனர் ராஜ் நிடிமோருவை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். அவரைப் போலவே, இரண்டாவது முறையாக உண்மையான காதலைக் கண்டறிந்த பல நடிகைகள் உள்ளனர்.
10:33 PM (IST) Dec 01
அமெரிக்காவின் H-1B விசா அனுமதிகளில் இந்திய ஐடி நிறுவனங்களின் பங்கு 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 70% சரிந்துள்ளது. அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு திறன்களுக்காக வெளிநாட்டு ஊழியர்களை அதிகளவில் பணியமர்த்தி ஆதிக்கம் செலுத்துகின்றன.
10:23 PM (IST) Dec 01
Hardik Pandya Returns to India T20 Squad: காயத்தில் இருந்த குணமடைந்த இந்திய அணி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
10:19 PM (IST) Dec 01
மகாராஷ்டிராவில் காதலன், காதலியின் சகோதரனால் கொல்லப்பட்ட வழக்கில், இரண்டு போலீஸ்காரர்கள்தான் கொலைக்குத் தூண்டியதாக காதலி அஞ்சல் குற்றம் சாட்டியுள்ளார். காதலனின் சடலத்தைத் திருமணம் செய்துகொண்ட அவர், குடும்பத்தினருக்கு தூக்குத் தண்டனை கோரியுள்ளார்.
10:19 PM (IST) Dec 01
FJ and Viyana Love Relationship : பிக் பாஸ் வீட்டில் எஃப்ஜே மற்றும் வியானாவின் காதலுக்கு பங்கம் விளைவிக்கிற மாதிரி பிக்பாஸ் எஃப்ஜேயின் எக்ஸ் லவ்வரான ஆதிரியை வைல்டு கார்டு கண்டஸ்டண்டாக வீட்டிற்குள் கொண்டு வந்துள்ளார்.
09:45 PM (IST) Dec 01
JEE Main JEE Main 2026 தேர்வில் அதிக மதிப்பெண் பெற மாதிரித் தேர்வுகளை (Mock Tests) எப்படி அணுக வேண்டும்? நேரம் மேலாண்மை மற்றும் தேர்வு உத்திகள் பற்றிய முழுமையான வழிகாட்டுதல் இங்கே.
09:40 PM (IST) Dec 01
ராமேஸ்வரம் மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பரிதவிக்கும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் அதை கவனிக்காமல் இலங்கைக்கு உதவி செய்வதாக அறிவித்துள்ளார் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
09:39 PM (IST) Dec 01
SSC GD Constable Recruitment 2025 மத்திய அரசின் BSF, CISF, CRPF படைகளில் 25,487 கான்ஸ்டபிள் பணியிடங்கள் அறிவிப்பு. கல்வித் தகுதி 10-ம் வகுப்பு. சம்பளம் ரூ.69,100 வரை. விண்ணப்பிக்க கடைசி தேதி டிசம்பர் 31. முழு விவரம் உள்ளே.
09:32 PM (IST) Dec 01
BSNL வாடிக்கையாளர்களின் கோரிக்கையை ஏற்று BSNL மீண்டும் ரூ.1 Freedom Plan-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய சிம் வாங்குபவர்களுக்கு 30 நாட்கள் அன்லிமிடெட் கால் மற்றும் டேட்டா இலவசம். முழு விவரம் இதோ.
09:26 PM (IST) Dec 01
Rage Bait ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் 2025-ம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக 'Rage Bait'-ஐ அறிவித்துள்ளது. இணையத்தில் உங்களை கோபப்படுத்தி லைக்ஸ் வாங்கும் இந்த உத்தி பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளுங்கள்.
09:22 PM (IST) Dec 01
December டிசம்பர் மாதம் வெளியாகவுள்ள புதிய ஸ்மார்ட்போன்கள் எவை? 8000mAh பேட்டரியுடன் வரும் OnePlus 15R, 200MP கேமரா கொண்ட Vivo X300 மற்றும் பட்ஜெட் விலையில் Redmi 15C. முழு விவரம் இதோ.
09:18 PM (IST) Dec 01
Reason Behind Samantha Marriage at the Isha Yoga : சமந்தா மற்றும் ராஜ் நிடிமோரு திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் பூத சுத்தி விவாஹம் முறையில் திருமணம் செய்துகொண்டது சிறப்பம்சமாகும். அது என்னவென்று தெரிந்து கொள்வோம்.
09:15 PM (IST) Dec 01
Redmi 15C 5G இந்தியாவில் டிசம்பர் 3 அன்று அறிமுகமாகிறது. 6.9 இன்ச் டிஸ்ப்ளே, 50MP கேமரா மற்றும் 6000mAh பேட்டரி கொண்ட இந்த பட்ஜெட் போனின் முழு விவரங்களை இங்கே படியுங்கள்.
09:12 PM (IST) Dec 01
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, நடிகர் விஜய் ரூ.200 கோடி சம்பளம் வாங்குவது திமுக போட்ட பிச்சை என்று கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஒரு தட்டினால் விழுந்துவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
09:09 PM (IST) Dec 01
Realme P4x 5G டிசம்பர் 4 அன்று அறிமுகமாகும் Realme P4x 5G போனின் விலை விவரங்கள் லீக் ஆனது. ரூ.15,999 விலையில் 7000mAh பேட்டரி, Dimensity 7400 சிப்செட் என அசத்தலான அம்சங்கள். முழு விவரம்.
09:07 PM (IST) Dec 01
Gandhimathi Stores Business Level : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 651ஆவது எபிசோடில் காந்திமதி ஸ்டோர்ஸில் வியாபாரம் அமோகமாக நடக்கிறது என்று சுகன்யாவை சக்திவேல் பாராட்டியுள்ளார்.
09:04 PM (IST) Dec 01
iQOO 15 இந்தியாவில் iQOO 15 விற்பனை இன்று தொடங்கியது. ரூ.7,000 வங்கித் தள்ளுபடி மற்றும் சலுகைகளுடன் இந்த 7000mAh பேட்டரி கொண்ட போனை ரூ.64,999 முதல் வாங்கலாம். முழு விவரம்.
08:44 PM (IST) Dec 01
விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற எடுத்டஹ் முடிவு ஒரே இரவில் எடுத்தது அல்ல. அதனை நாம் மதிக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
08:26 PM (IST) Dec 01
லலித் மோடி தனது பிறந்தநாளைக் கொண்டாடிய இடம் மிகவும் ஆடம்பரமானது. பணத்தின் அடிப்படையில் மிகவும் விலையுயர்ந்தது. அங்கு குறைந்தபட்ச மேசைக்கான செலவு ரூ. 1.18 லட்சம் ஆகும்.
08:22 PM (IST) Dec 01
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப்-4 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தேதிகளை அறிவித்துள்ளது. இந்த கலந்தாய்வு டிசம்பர் 8 முதல் 18 வரை சென்னையில் நடைபெற உள்ளது.
08:09 PM (IST) Dec 01
Akhanda 2 Jukebox Released : அகண்டா 2 ஜூக்பாக்ஸ்: நந்தமுரி பாலகிருஷ்ணா மற்றும் போயபதி கூட்டணியில் உருவாகும் அகண்டா 2 திரைப்படத்தின் இசைப் பயணம் தொடங்கியுள்ளது. தமன் இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் அடங்கிய ஜூக்பாக்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது.
07:58 PM (IST) Dec 01
அமித்ஷா சொல்லி செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததாக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்து இருந்தார். இப்போது செங்கோட்டையன் உதயநிதி கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
07:47 PM (IST) Dec 01
நாட்டின் வங்கிகளுக்கு ₹26,645 கோடி (₹31,437 கோடி வட்டியுடன்) மோசடி செய்த 15 பொருளாதார குற்றவாளிகளிம் இமிருந்து ₹19,187 கோடி மீட்கப்பட்டுள்ளதாக அரசு கூறியது.
07:31 PM (IST) Dec 01
தற்போது பலரும் வாயு, வயிற்று எரிச்சல், வயிறு உப்புசம் பிரச்சினையால் அவதிப்படுகின்றனர். இதை சரி செய்ய சில வீட்டு வைத்தியங்கள் இதோ.
07:30 PM (IST) Dec 01
Samantha 2nd Marriage With Raj Nidimoru : சமந்தா மற்றும் ராஜ் நிடிமோரு இன்று திருமணம் செய்து கொண்டனர். நீண்ட நாட்களாக காதலித்து வந்த இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், நடிகை பூனம் கவுரின் பதிவு பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
07:07 PM (IST) Dec 01
சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த 87 கடன் வழங்கும் செயலிகளை மத்திய அரசு முடக்கியுள்ளது. இந்தச் செயலிகளுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மீதும் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
07:04 PM (IST) Dec 01
டிஜிட்டல் கைதுகள், முதலீட்டு மோசடிகள், பகுதிநேர வேலை மோசடிகள். இது சைபர் குற்றத்தின் மிகவும் தீவிரமான பகுதிகள். இங்கு மிரட்டி பணம் பறித்தல் அல்லது அதிக பணம் தருவதாக வாக்குறுதி அளித்து மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.
06:47 PM (IST) Dec 01
அதிமுகவை சேர்ந்த 35 மாவட்டச்செயலாளர்கள் தவெகவில் சேர உள்ளனர். உரிமை மீட்புகழகம் ஓ.பன்னீர்செல்வம் தவெக கூட்டணிக்கு வர இருக்கிறார். டிடிவி.தினகரன் வருகிறார். இன்னும் துண்டு துக்கடா கட்சிகளை ஒங்கிணைத்து விஜய் மாபெரும் திட்டத்தை கையில் வைத்துள்ளார்
06:46 PM (IST) Dec 01
Aurora Sinclair Extend her Relationship with Kamurudin: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் போட்டியாளரான பாரு கம்ருதீனுக்கும்அரோராக்கும் இடையே உள்ள உறவை முறித்து கம்ருதீன் தன்னிடம் மட்டுமே பேச வேண்டும் என்று நினைக்கிறார்.
06:46 PM (IST) Dec 01
இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ரோகித், விராட் கோலியை ஓரம் கட்டி வரும் நிலையில், கம்பீர், அகார்கரை பிசிசிஐ அவசர கூட்டத்துக்கு அழைத்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
06:41 PM (IST) Dec 01
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில், திருமணத்தின் போது மாலை மாற்றும் சடங்கு முடிந்ததும் மணப்பெண் மாயமானார். பின்னர், அவர் தனது காதலனுடன் தப்பியோடி, அவருடன் வாழ விரும்புவதாகத் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.
06:36 PM (IST) Dec 01
எண் கணிதத்தின் படி, சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் புகழின் உச்சத்தை அடைய பிறந்தவர்கள் என்று கூறுகிறது. அது என்னென்ன தேதிகள் என்று இங்கு பார்க்கலாம்.
05:58 PM (IST) Dec 01
சைபர் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில், தொலைத்தொடர்பு அமைச்சகம் அனைத்து புதிய ஸ்மார்ட்போன்களிலும் சஞ்சார் சாத்தி செயலியை முன்கூட்டியே நிறுவ உத்தரவிட்டுள்ளது. இந்தச் செயலி பயனர்களால் நீக்க முடியாதபடி இருக்க வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தியுள்ளது.
05:46 PM (IST) Dec 01
அஞ்சலகத்தின் டெர்ம் டெபாசிட் (TD) திட்டம், பல வங்கி FD-களை விட அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறது. இது அரசு உத்தரவாதத்துடன் கூடிய பாதுகாப்பான முதலீடாகும். இதில் 5 ஆண்டு டெபாசிட்டிற்கு 7.5% வரை வட்டி கிடைக்கிறது.
05:43 PM (IST) Dec 01
This Month Rasi Palan: டிசம்பர் 2025 கன்னி ராசிக்கான பொதுவான பலன்கள், கிரக நிலைகள், தொழில் மற்றும் வேலை, நிதி நிலைமை, ஆரோக்கியம், பரிகாரங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
05:39 PM (IST) Dec 01
சென்னையில் கனமழை விடாமல் வெளுத்து வாங்கி வரும் நிலையில், நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மேலும் 2 மாவட்டங்களுக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
05:28 PM (IST) Dec 01
இந்த பதிவில் யாரெல்லாம் வெந்நீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதற்கான காரணம் என்னவென்று இங்கு பார்க்கலாம்.
05:20 PM (IST) Dec 01
கியாவின் இரண்டாம் தலைமுறை செல்டோஸ் மாடல் டிசம்பர் 10 அன்று உலகளவில் அறிமுகமாகிறது. இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடல், புதுப்பிக்கப்பட்ட எக்ஸ்டீரியர், டூயல் கர்வ் ஸ்கிரீன் கொண்ட பிரீமியம் இன்டீரியர் மற்றும் மேம்பட்ட இடவசதியுடன் வருகிறது.
05:11 PM (IST) Dec 01
சென்னையில் அதிகாலை முதல் கனமழை பெய்து வரும் நிலையில், இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. சென்னையில் தேங்கிய மழைநீரை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.