MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரசிகர்களை தொற்றிக் கொண்ட அகாண்ட 2 ஃபீவர்; மொத்தமாக வெளியான அகாண்டா 2 ஜூக்பாக்ஸ்!

ரசிகர்களை தொற்றிக் கொண்ட அகாண்ட 2 ஃபீவர்; மொத்தமாக வெளியான அகாண்டா 2 ஜூக்பாக்ஸ்!

Akhanda 2 Jukebox Released : அகண்டா 2 ஜூக்பாக்ஸ்: நந்தமுரி பாலகிருஷ்ணா மற்றும் போயபதி கூட்டணியில் உருவாகும் அகண்டா 2 திரைப்படத்தின் இசைப் பயணம் தொடங்கியுள்ளது. தமன் இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் அடங்கிய ஜூக்பாக்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது.

1 Min read
Author : Rsiva kumar
Published : Dec 01 2025, 08:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
நந்தமுரி பாலகிருஷ்ணா அகாண்டா 2
Image Credit : Asianet News

நந்தமுரி பாலகிருஷ்ணா - அகாண்டா 2

நந்தமுரி பாலகிருஷ்ணாவின் அகாண்டா 2 படம் தான் இப்போது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அகாண்டா படத்திற்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பைத் தொடர்ந்து இந்தப் படத்தின் 2ஆம் பாகத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் போயபதி ஸ்ரீனு. கிட்டத்தட்ட ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

25
அகாண்டா மற்றும் முரளி கிருஷ்ணா
Image Credit : X

அகாண்டா மற்றும் முரளி கிருஷ்ணா

இந்தப் படத்தில் பாலகிருஷ்ணா அகாண்டா மற்றும் முரளி கிருஷ்ணா என்று இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். மேலும், சம்யுக்தா, ஆதி பினிஷெட்டி, ஹர்ஷாலி மல்ஹோத்ரா, கபீர் துகான் சிங், ரவி மரியா, பூர்ணா ஆகியோர் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

35
பாலகிருஷ்ணா, போயபதி கூட்டணி
Image Credit : stockPhoto

பாலகிருஷ்ணா, போயபதி கூட்டணி

பாலகிருஷ்ணா, போயபதி கூட்டணியில் இது நான்காவது படம். இதற்கு முன் இவர்களது கூட்டணியில் சிம்ஹா, லெஜண்ட், அகண்டா படங்கள் வெளியாகி வெற்றி பெற்றன. ஆதலால் இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் பாலகிருஷ்ணாவின் கெட்டப் ஆக்ரோஷமாக உள்ளது. சிவபக்தி தொடர்பான அம்சங்கள் அதிகமாக இருக்கும்.

45
அகாண்டா 2 ஆடியோ ஜூக்பாக்ஸ்
Image Credit : 14 Reels Plus/ Youtube

அகாண்டா 2 ஆடியோ ஜூக்பாக்ஸ்

இந்த நிலையில் தான் இந்த படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த ஆக்‌ஷன் படத்தின் ஆடியோ ஜூக்பாக்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. தமன் இசையில் அகண்டா 2 மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. முதல் பாகத்தில் தியேட்டர்கள் அதிரும் அளவிற்கு தமன் இசை அமைத்திருந்தார். பாலகிருஷ்ணாவின் மாஸ் காட்சிகளுக்கு பிஜிஎம் தெறிக்கவிட்டது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

55
பாலகிருஷ்ணா மற்றும் ஆதி
Image Credit : youtube/14 reels

பாலகிருஷ்ணா மற்றும் ஆதி

வரும் டிசம்பர் 5ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வருகிறது. இந்தப் படத்தில் பாலகிருஷ்ணாவிற்கு நடிகர் ஆதி வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சினிமா
சினிமா காட்சியகம்
திரைப்படம்
பாலகிருஷ்ணா

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆதாரத்தோடு வந்து நின்ற கார்த்திக்! ஆடிப்போன சந்திரகலா.. சாமுண்டீஸ்வரி முகத்தில் சந்தோஷம்! கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்!
Recommended image2
வயித்துல இருக்குற குழந்தையை நினைச்சு உருகும் ரோகிணி - கார்த்திகை தீபம் உருக்கமான கட்டம்!
Recommended image3
விஜய் முன்னே ரஷ்மிகாவிடம் ரக்ஷித் ஷெட்டி குறித்து கேள்வி – வைரலான ரியாக்ஷன் வீடியோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved