- Home
- Politics
- விஜயுடன் இணையும் அண்ணாமலை..! செந்தில் பாலாஜிக்கு செக்..! இபிஎஸின் கடைசி பொதுக்குழு..! பகீர் கிளப்பும் நாஞ்சில் சம்பத்..!
விஜயுடன் இணையும் அண்ணாமலை..! செந்தில் பாலாஜிக்கு செக்..! இபிஎஸின் கடைசி பொதுக்குழு..! பகீர் கிளப்பும் நாஞ்சில் சம்பத்..!
அதிமுகவை சேர்ந்த 35 மாவட்டச்செயலாளர்கள் தவெகவில் சேர உள்ளனர். உரிமை மீட்புகழகம் ஓ.பன்னீர்செல்வம் தவெக கூட்டணிக்கு வர இருக்கிறார். டிடிவி.தினகரன் வருகிறார். இன்னும் துண்டு துக்கடா கட்சிகளை ஒங்கிணைத்து விஜய் மாபெரும் திட்டத்தை கையில் வைத்துள்ளார்

‘‘டிசம்பர் 10 எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்குழு கூடுகிறது. அதுதான் அவருக்கு கடைசி பொதுக்குழு. அதற்கு பிறகு அவரது தலைமையில் பொதுக்குழுவே கூடாது. அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது’’ என பகீர் கிளப்புகிறார் மூத்த அரசியல்வாதியான நாஞ்சில் சம்பத்.
இதுகுறித்து அவர், ‘‘அண்ணாமலை தனி கட்சி தொடங்க வாய்ப்பு இருக்கிறது. அதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது. அதற்கு ஒருங்கிணைப்பாளராக ஒரு நபரை போட்டிருக்கிறார். அவர் தூத்துக்குடி மதிமுக மாவட்டச் செயலாளராக இருந்த செல்வம். டிசம்பரில் அண்ணாமலை கட்சி தொடங்கப் போவதாக சொல்கிறார்கள். ஒரு அரசியல் போட்டியளராக மாறுவார் அண்ணாமலை. அவர் விஜயுடன் சேர்ந்தால் விஜய்க்கு பலம் கூடத்தான் செய்யும். அவர் பாஜகவில் இருப்பவர். ஐபிஎஸ் படித்தவர். ஆற்றலாளர்.
பாஜகவில் அண்ணாமலையை என்ன செய்தார்கள் என தெரியவில்லை. அது இரும்பு திரையில் உள்ள கட்சி. நயினார் நாகேந்திரனை பதவியில் அமர்த்தி விட்டு இவரை தூக்கி எறிந்து விட்டார்கள். ஆகையால் இவர் மனம் உடைந்து விட்டார். ஒரு முடிவெடுத்து விடலாமே, ஐபிஎஸ் படித்து நாம் ஏன் தனிக்கட்சி ஆரம்பிக்கக் கூடாது? என நினைக்கிறார். அண்ணாமலை விஜயுடன் இருந்தால் மக்கள் மனதில் ஒரு பெரிய மாற்றம் நிகழும். இவர்கள் இருவரும் சேர்ந்தால் மேற்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜியை வீழ்த்த முடியும்.
செங்கோட்டையனும், அண்ணாமலையும் தொண்டர்களிடம் செல்பவர்கள். செந்தில் பாலாஜியின் அரசியல் கரன்சி அரசியல். அதிமுகவில் இருக்கும் போதும், திமுகவில் இருக்கும் போதும் கரன்சி அரசியல்தான் செய்தார். உள்ளாட்சி மன்ற தேர்தலில் எல்லோருக்கும் கரன்சி கொடுத்தார். இடைத்தேர்தல் என அனைத்து தேர்தலிலும் அவர் பரிசு அரசியல் செய்தார். ஆகையால், அண்ணாமலை, செங்கோட்டையன் இணைந்து கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜியின் அரசியலை சரிக்க வாய்ப்புள்ளது.
ஒரே நாளில் காலை ஏழு மணியிலிருந்து மாலை ஏழு மணி வரை 57 இடங்களில் என்னை பேச வைத்தார் செந்தில் பாலாஜி. அதுதான் அவரது திட்டமிடல். அங்கே அதிமுகவுக்கு பேரடி விழும்.அதிமுக மேற்கு மண்டலத்தில் மட்டுமல்ல, தமிழக முழுதும் பேரடியை சந்திக்கும். எடப்பாடியின் சர்வாதிகாரமான நடவடிக்கைகளை அதிமுக தொண்டர்களால் ஜீரணிக்க முடியவில்லை. ‘‘சம்பாதித்ததை காப்போம்; சம்மந்தியை மீட்போம்’’ என மக்கள் சந்திப்பை நடத்தினார். அந்த பயணம் எல்லாம் வெற்றி பெறவில்லை. எனக்கு தெரிந்து டிசம்பர் 10 எடப்பாடி பழனிசாமி தலைமையில் பொதுக்குழு கூடுகிறது. அதுதான் அவருக்கு கடைசி பொதுக்குழு. அதற்கு பிறகு அவரது தலைமையில் பொதுக்குழுவே கூடாது. அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.
எனக்கு இன்றைக்கு கிடைத்த தகவல். அதிமுகவை சேர்ந்த 35 மாவட்டச்செயலாளர்கள் தவெகவில் சேர உள்ளனர். உரிமை மீட்புகழகம் ஓ.பன்னீர்செல்வம் தவெக கூட்டணிக்கு வர இருக்கிறார். டிடிவி.தினகரன் வருகிறார். இன்னும் துண்டு துக்கடா கட்சிகளை ஒங்கிணைத்து விஜய் மாபெரும் திட்டத்தை கையில் வைத்துள்ளார்’’ என அடித்துக் கூறுகிறார் நாஞ்சில் சம்பத்.
