- Home
- Cinema
- தொலைக்காட்சி
- தாலியை வச்சு கணவரை பிளாக் மெயில் செய்த சாமூண்டீஸ்வரி; ஒரு வழியாக ஊர் மக்களை காப்பாற்றிய கார்த்திக்!
தாலியை வச்சு கணவரை பிளாக் மெயில் செய்த சாமூண்டீஸ்வரி; ஒரு வழியாக ஊர் மக்களை காப்பாற்றிய கார்த்திக்!
Chamundeshwari Stopped Kumbabishekam : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் சாமூண்டீஸ்வரி கும்பாபிஷேகத்தை நிறுத்திவிட்டு தனது மகள்களை கையோடு அழைத்து சென்றுவிட்டார்.

கார்த்திகை தீபம் 2 சீரியல்
கார்த்திகை தீபம் 2 சீரியலில் கும்பாபிஷேகம் நடக்குமா நடக்காதா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்த நிலையில் கார்த்திக் உண்மையை சொல்லவே சாமுண்டீஸ்வரி கும்பாபிஷேகத்தை நிறுத்தினார். அதன் பிறகு ராஜராஜன் தன்னால் நின்ற போன கும்பாபிஷேகத்தை நடத்தியே தீர்வேன் என்று விடாபிடியாக இருந்தார்.
சாமுண்டீஸ்வரி
ஆனால், சாமுண்டீஸ்வரி நீங்கள் வரவில்லை என்றால் தாலியை கழற்றி குண்டத்தில் போட்டுவிடுவேன் என்று மிரட்டி ராஜராஜனையும் சரி, தனது மகள்களையும் சரி அங்கிருந்து கூட்டிச் சென்றார். மேலும், இனிமேல் தனக்கும் இந்த ஊருக்கும், இந்த குடும்பத்திற்கும் இருந்த பந்தம் இத்தோடு முடிந்தது என்று கூறி தலையில் தண்ணீர் ஊற்றினார்.
கும்பாபிஷேகம்
இதைத் தொடர்ந்து கும்பாபிஷேகத்தை நடத்த ஏற்பாடுகள் செய்கிறார்கள், அதன் பிறகு அவர்களால் கும்பாபிஷேகமே நின்று விடுகிறது என்று விருமன் கார்த்திக் மற்றும் பரமேஸ்வரி ஆகியோரை வசை பாடினார். ஒரு கட்டத்தில் கார்த்திக்கை எல்லோரும் அடிக்க போக, அவர் தடுமாறி கீழே விழுந்தார். அப்போது கீழே இருந்த மாலையை தொட்டு பார்த்த போது அதில் வெடிகுண்டு இருப்பதை கார்த்திக் கண்டுபிடித்தார். டைமிங் ஓடிக் கொண்டிருக்க அந்த வெடிகுண்டை மட்டும் எடுத்து தூக்கி வெளியில் வீசினார். வெடிகுண்டு வெடிப்பதை பார்த்த விருமன் சிறிது நேரம் கண் கலங்கி நின்றார்.