- Home
- Tamil Nadu News
- பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..! மாணவர்கள் குஷி! எந்தெந்த மாவட்டங்கள்?.. முழு விவரம்!
பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..! மாணவர்கள் குஷி! எந்தெந்த மாவட்டங்கள்?.. முழு விவரம்!
சென்னையில் கனமழை விடாமல் வெளுத்து வாங்கி வரும் நிலையில், நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் மேலும் 3 மாவட்டங்களுக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

சென்னைக்கு ரெட் அலர்ட்
டிட்வா புயல் காரணமாக சென்னை மாநகர் முழுவதும் இன்று அதிகாலை முதலே கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. விடாமல் அடிக்கும் மழை காரணமாக நகரின் பல இடங்களில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. நாளையும் சென்னைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கபப்ட்டுள்ளது.
சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் நாளை (டிசம்பர் 2ம் தேதி) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் சென்னையின் புறநகர் மாவட்டங்களான செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் காஞ்சீபுரம் மாவட்டத்திலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இன்றே விடுமுறை விடாதது ஏன்?
சென்னையில் இன்று காலை முதல் கனமழை கொட்டியபோதிலும் இன்று ஏன் பள்ளிகளுக்கு விடுமுறை ஏன்? என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி இருந்தனர். பெற்றோர்கள் கனமழைக்கு மத்தியில் கடும் சிரமத்துடன் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளில் இருந்து அழைத்து வந்தனர். இதனால் விடுமுறை விடாத தமிழக அரசு மீது கண்டனங்கள் பாய்ந்தன.
விடுமுறை விடாததற்கு அன்புமணி கண்டனம்
''சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் இன்று காலை முதல் கடுமையான மழை பெய்து வரும் நிலையில், பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும் இன்று வழக்கம் போல நடத்தப்பட்டதால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல பள்ளிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் நனைந்தபடியே வீடு திரும்பியுள்ளனர்.
மாணவர்களின் துயரத்திற்கு தமிழக ஆட்சியாளர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கும் அதிகாரம் மீண்டும் கல்வித்துறைக்கே மாற்றப்பட வேண்டும்'' என்று பாமக தலைவர் அன்புமணியும் கண்டனம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

