- Home
- Tamil Nadu News
- பிச்சைக்காரன் மாதிரி மூஞ்ச வெச்சு இருக்கிறவனுக்கு எல்லாம் 200 கோடியா..! இதெல்லாம் திமுக போட்ட பிச்சை...! ஆர்.எஸ் பாரதி பேச்சு
பிச்சைக்காரன் மாதிரி மூஞ்ச வெச்சு இருக்கிறவனுக்கு எல்லாம் 200 கோடியா..! இதெல்லாம் திமுக போட்ட பிச்சை...! ஆர்.எஸ் பாரதி பேச்சு
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, நடிகர் விஜய் ரூ.200 கோடி சம்பளம் வாங்குவது திமுக போட்ட பிச்சை என்று கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஒரு தட்டினால் விழுந்துவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

விஜயை விமர்சித்த ஆர்.எஸ். பாரதி
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் குறித்து, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். கட்சி நிகழ்ச்சியில் பேசும்போது விஜய் பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
தி.மு.க.வின் பங்களிப்பு இல்லாமல் இருந்திருந்தால், தமிழ் சினிமாவில் நடிகர்கள் யாரும் இவ்வளவு பெரிய சம்பளத்தைப் பெற்றிருக்க முடியாது என்று பேசிய அவர், நடிகர்களை நோக்கி அனல் பறக்கும் கருத்துக்களைத் தெரிவித்தார்.
தி.மு.க. போட்ட பிச்சை
ஆர்.எஸ். பாரதி பேசியதாவது:
"இன்று தமிழ் சினிமாவில் ஒரு படத்துக்கு ரூ.200 கோடி சம்பளம் வாங்குகிறார்கள் என்றால், அது தி.மு.க. போட்ட பிச்சை. மகாராஷ்டிராவில் மராட்டிய மொழியில் படமே கிடையாது, எல்லாம் இந்தி படம்தான். இந்தி படமே ஓடாத ஒரு மாநிலம் உண்டு என்றால் அது தமிழ்நாடுதான். அதனால்தான் தமிழ் நடிகன் படத்தில் நடித்து ரூ.200 கோடி வாங்குகிறான்."
“தி.மு.க. என்ற கட்சி இல்லை என்றால் தமிழ்நாட்டில் சினிமாக்காரர்கள் ரூ.200 கோடி எல்லாம் வாங்கியிருக்கவே முடியாது. தி.மு.க. இல்லாமல் இருந்திருந்தால் இவர்கள் எல்லாம் பிளாட்பாரத்தில் பிச்சை எடுத்துக்கொண்டு இருந்திருப்பார்கள். பிச்சை எடுக்கிறவன் போல முகத்தை வைத்திருப்பவனுக்கு ரூ.200 கோடி வருகிறது என்றால், சினிமாவைத் தமிழ்ச் சக்தியாக மாற்றி வைத்த தி.மு.க.தான் காரணம்.”
ஒரு தட்டுத் தட்டினால் போதும்
சமீபகாலமாகப் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளைக் குறிப்பிட்டு ஆர்.எஸ். பாரதி பேசியபோது, நடிகர் விஜய்-இன் தமிழக வெற்றிக் கழகத்தைத் தாக்கிப் பேசினார்.
“நம்மைத் திட்டியவர்கள், பேசியவர்கள் எல்லாம் நாடு பூராவும் நிற்கிறார்கள். ஒரு கட்சியில் அப்பன் ஒரு பக்கம், பிள்ளை ஒரு பக்கம் என நிற்கிறார்கள். ஒரு கட்சி நாலு துண்டுகளாகப் போய்விட்டது. இன்னொன்று புதிதாக வந்திருக்கிறது. அது ஒன்றும் பெரிய சக்தி கிடையாது. ஒரு தட்டுத் தட்டினால் போதும் விழுந்துவிடும். அது எப்படித் தட்டவேண்டும் என்று நமக்குத் தெரியும்.”
எஸ்.ஐ.ஆர். குறித்து விமர்சனம்
மேலும், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் (SIR) பணிகள் குறித்தும் ஆர்.எஸ். பாரதி பேசினார்.
"எஸ்.ஐ.ஆர். பணியில் வாக்காளர்களிடம் அது, இது என்று கேட்டார்கள். இப்போது எதுவும் வேண்டாம், படிவத்தைக் கொடுத்தால் போதும் என்று கூறிவிட்டார்கள். உளவுத்துறை மூலமாக அவர்களுக்குச் செய்தி போய்விட்டது. தி.மு.க.காரன் மட்டும்தான் எஸ்.ஐ.ஆர். பணி மூலம் வாக்காளர்களைச் சேர்த்திருக்கிறார்கள். இதே நிலையில் தேர்தல் வைத்தால் எல்லா தொகுதிகளிலும் அவர்களே வெற்றி பெற்றுவிடுவார்கள் என்று செய்தி கிடைத்துதான் விதிமுறைகளைத் தளர்த்தி இருக்கிறார்கள். ஆனால் மோடியே வந்து ஓட்டுப் போட்டாலும் இங்கே அவர்கள் வெற்றி பெற முடியாது.”
"ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வெளிநாட்டில், வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க முயற்சி செய்துகொண்டு இருக்கிறார்கள். அவர்கள் மொத்தம் 65 லட்சம் பேர் இருக்கிறார்கள்," என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
