நாட்டின் வங்கிகளுக்கு ₹26,645 கோடி (₹31,437 கோடி வட்டியுடன்) மோசடி செய்த 15 பொருளாதார குற்றவாளிகளிம் இமிருந்து ₹19,187 கோடி மீட்கப்பட்டுள்ளதாக அரசு கூறியது.

தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்கள் மீது என்ன முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? என்பது தொடர்பாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது. இந்த குற்றவாளிகளில் நீரவ் மோடி, விஜய் மல்லையா மற்றும் நிதின் சந்தேசரா உள்ளிட்ட 15 பொருளாதார குற்றவாளிகள் அடங்குவர். அவர்களிடமிருந்து இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை மீட்கப்பட்ட தொகைகளின் முழுமையான விவரங்களை அரசாங்கம் வழங்கியுள்ளது. மக்களவையில் ஒரு கேள்விக்கு பதிலளித்த நிதி அமைச்சகம், தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டம், 2018-ன் கீழ் இதுவரை மொத்தம் 15 நபர்கள் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறியது.

தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டம், 2018-ன் கீழ், குறிப்பாக பொதுத்துறை வங்கிகளுக்கு எதிரான பெரிய அளவிலான நிதி மோசடிகள் தொடர்பான வழக்குகளில், எத்தனை பேர் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்று அரசாங்கத்திடம் கேட்கப்பட்டது. தப்பியோடியதாக அறிவிக்கப்பட்ட பொருளாதார குற்றவாளிகளால் பொதுத்துறை வங்கிகளுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து தகவல் கோரப்பட்டது.

ஒரு முறை தீர்வு (OTS) திட்டத்தின் கீழ் இதுவரை எத்தனை தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் கடன் தீர்வுகளை பேச்சுவார்த்தை நடத்தினர் என்றும் அரசாங்கத்திடம் கேட்கப்பட்டது. அத்தகைய பொருளாதார குற்றவாளிகள் நாட்டை விட்டு வெளியேறுவதை சட்டப்பூர்வமாக தடை செய்யப்படுவதையோ அல்லது எதிர்காலத்தில் கண்காணிப்பு பட்டியலில் சேர்க்கப்படுவதையோ உறுதி செய்வதற்கான கொள்கையை அரசாங்கம் உருவாக்குகிறதா? எனவும் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, நாட்டின் வங்கிகளுக்கு ₹26,645 கோடி (₹31,437 கோடி வட்டியுடன்) மோசடி செய்த 15 பொருளாதார குற்றவாளிகளிம் இமிருந்து ₹19,187 கோடி மீட்கப்பட்டுள்ளதாக அரசு கூறியது. இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள், நீரவ் மோடி, விஜய் மல்லையா மற்றும் நிதின் சந்தேசரா உள்ளிட்ட 15 தப்பியோடியவர்களிடம் இருந்து அரசு பாதிக்கும் மேற்பட்ட தொகையை மீட்டெடுத்துள்ளதாக கூறியுள்ளது

வங்கியின் பெயர், தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவரின் பெயர், என்பிஏ தேதியிலிருந்து 31.10.2025 வரை பெறப்பட்ட வட்டியின் அசல் தொகை,குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தேதியிலிருந்து 31.10.2025 வரை மீட்கப்பட்ட மொத்த தொகை (கோடிகளில்) விவரங்களை அறிவித்துள்ளது.

பாங்க் ஆஃப் பரோடா, சுதர்ஷன் வெங்கடராமன், ராமானுஜம் சேஷாரத்தினத்திடம் பெறப்பட்ட வட்டி.ரூ 97.49 கோடி. அசல் தொகை 228.22 கோடி. மீட்கப்பட்ட மொத்த தொகை 4.45 கோடி

பாங்க் ஆஃப் பரோடா விஜய் மல்லையா (கிங்பிஷர் ஏர்லைன்ஸ்) பெறப்பட்ட வட்டி ரூ.494.33 கோடி. அசல் தொகை ரூ.1,341 கோடி. மீட்கப்பட்ட மொத்த தொகை ரூ.995.55 கோடி

பாங்க் ஆஃப் பரோடா நிரவ் மோடி (ஃபயர்ஸ்டார் குழுமம்) பெறப்பட்ட வட்டி ரூ.301.98 கோடி அசல் தொகை ரூ. 206.40 கோடி மீட்கப்பட்ட மொத்த தொகை ரூ.99.24 கோடி.

பாங்க் ஆஃப் பரோடா , நிதின் ஜே.சந்தேசரா, சேத்தன் ஜே.சந்தேசரா, தீப்தி சந்தேசரா

பெறப்பட்ட வட்டி ரூ.18 கோடி அசல் தொகை ரூ.188.53 கோடி. மீட்கப்பட்ட மொத்த தொகை ரூ 67.95 கோடி.

பாங்க் ஆஃப் இந்தியா, நிரவ் மோடி பெறப்பட்ட வட்டி ரூ. 179.48 கோடி அசல் தொகை ரூ. 142.40 கோடி. மீட்கப்பட்ட மொத்த தொகை ரூ.50.05 கோடி

பாங்க் ஆஃப் இந்தியா நிதின் சண்டேசரா, சேதன் சண்டேசரா, தீப்தி சண்டேசரா பெறப்பட்ட வட்டி ரூ.1,392.78 கோடி. அசல் தொகை ரூ.1,670.91 கோடி. மீட்கப்பட்ட மொத்த தொகை ரூ.424.35 கோடி.

பேங்க் ஆஃப் இந்தியா, விஜய் மல்லையா பெறப்பட்ட வட்டி ரூ.565.45 அசல் தொகை ரூ.1,556.81மீட்கப்பட்ட மொத்த தொகை ரூ.974.38 கோடி.

பேங்க் ஆஃப் இந்தியா புஷ்பேஷ் குமார் பைட் பெறப்பட்ட வட்டி ரூ.20.41 அசல் தொகை ரூ.60.87 மீட்கப்பட்ட தொகை ரூ.2.06 கோடி.

பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா நிரவ் மோடி பெறப்பட்ட வட்டி ரூ.137.19 கோடி. அசல் தொகை ரூ. 213.45 கோடி. மீட்கப்பட்ட மொத்த தொகை ரூ.67.36 கோடி.

நிதின் சண்டேசரா மற்றும் சேத்தன் சண்டேசராபெறப்பட்ட வட்டி ரூ. 19.42 கோடி. அசல் தொகை ரூ.57.30 கோடி. மீட்கப்பட்ட மொத்த தொகை ரூ.12.69 கோடி.

கனரா வங்கி நிரவ் மோடி (ஃபயர்ஸ்டார் இன்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட்) பெறப்பட்ட வட்டி ரூ.84.35 கோடி. அசல் தொகை ரூ.245.11 கோடி. மீட்கப்பட்ட மொத்த தொகை ரூ.5.61 கோடி

கனரா வங்கி நிதின் ஜெயந்திலால் சந்தேசரா (ஸ்டெர்லிங் பயோடெக் லிமிடெட்) சேத்தன் ஜெயந்திலால் சந்தேசரா (ஸ்டெர்லிங் பயோடெக் லிமிடெட்) பெறப்பட்ட வட்டி ரூ.190.85 கோடி. அசல் தொகை ரூ.699.37 கோடி.மீட்கப்பட்ட மொத்த தொகை ரூ.41.53 கோடி.

சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா நிரவ் மோடி (இயக்குனர் - ஃபயர்ஸ்டார் இன்டர்நேஷனல் லிமிடெட்)பெறப்பட்ட வட்டி ரூ. 127.30 கோடி. அசல் தொகை ரூ.69.98 கோடி. மீட்கப்பட்ட மொத்த தொகை ரூ.23.02 கோடி.

பஞ்சாப் நேஷனல் வங்கி நிரவ் மோடி - ஃபயர்ஸ்டார் இன்டர்நேஷனல் லிமிடெட். பெறப்பட்ட வட்டி ரூ.237.35 அசல் தொகை ரூ.233.06 கோடி. மீட்கப்பட்ட மொத்த தொகை ரூ.48.36 கோடி.

பஞ்சாப் நேஷனல் வங்கி நிரவ் மோடி - ஃபயர்ஸ்டார் டயமண்ட் இன்டர்நேஷனல் லிமிடெட். பெறப்பட்ட வட்டி ரூ.60.88 கோடி. அசல் தொகை ரூ.91.67 கோடி. மீட்கப்பட்ட மொத்த தொகை ரூ.115.46 கோடி.

பஞ்சாப் நேஷனல் வங்கி நிரவ் மோடி - பிறக்காத மோசடி பெறப்பட்ட வட்டி ரூ. 6,799.18 கோடி -மீட்கப்பட்ட மொத்த தொகை ரூ. 93.21 கோடி.

பஞ்சாப் நேஷனல் வங்கி விஜய் மல்லையா - கிங்பிஷர் ஏர்லைன்ஸ் லிமிடெட் பெறப்பட்ட வட்டி ரூ.899.56 கோடி. அசல் தொகை ரூ.324.52 கோடி. மீட்கப்பட்ட மொத்த தொகை ரூ.946.17 கோடி.

பஞ்சாப் நேஷனல் வங்கி ஸ்டெர்லிங் SEZ & இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் இயக்குனர் நிதின் ஜெயந்திலால் சந்தேசரா சேத்தன் ஜெயந்திலால் சண்டேசரா பெறப்பட்ட வட்டி ரூ.762.45 கோடி. அசல் தொகை ரூ.1,204.17 கோடி. மீட்கப்பட்ட மொத்த தொகை ரூ.369.22 கோடி.

பஞ்சாப் நேஷனல் வங்கி நிதின் சந்தேசரா, சேத்தன் குமார் சண்டேசரா - ஸ்டெர்லிங் பயோடெக் லிமிடெட் 2பெறப்பட்ட வட்டி ரூ.11.57 கோடி. அசல் தொகை ரூ. 104.33 கோடி. மீட்கப்பட்ட மொத்த தொகை ரூ.46.99 கோடி.