நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தாமிரபரணி ஆற்றில் ஒரு லட்சம் கன அடிக்கும் மேலாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

11:10 PM (IST) Dec 18
இந்த வங்கி விதிகள் எல்லாம் ஜனவரி 1 முதல் மாற உள்ளது. லாக்கருக்கான புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டியது அவசியம் ஆகும். இன்னும் பல மாற்றங்கள் நடைமுறைக்கு வர உள்ளது.
10:44 PM (IST) Dec 18
48 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து 30 நாட்கள் வேலிடிட்டி பெறும் சிறந்த திட்டத்தினை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
10:14 PM (IST) Dec 18
கலால் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை புதிய சம்மன் அனுப்பியுள்ளது.
08:09 PM (IST) Dec 18
08:02 PM (IST) Dec 18
08:00 PM (IST) Dec 18
07:58 PM (IST) Dec 18
07:56 PM (IST) Dec 18
07:52 PM (IST) Dec 18
ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனத்தின் விடா வி1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.31,000 வரை தள்ளுபடி உடன் கிடைக்கிறது. இது பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
06:59 PM (IST) Dec 18
தமிழகத்தின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு முதல் முறையாக அதிகனமழை தென் மாவட்டங்களில் கொட்டித்தீர்த்துள்ளது.
06:40 PM (IST) Dec 18
05:34 PM (IST) Dec 18
மாதந்தோறும் ரூ.1 லட்சத்துக்கும் மேலாக வருமானம் கிடைக்கும் அதிக லாபம் தரும் வணிக ஐடியாவை தெரிந்து கொள்ளுங்கள்.
05:17 PM (IST) Dec 18
இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 33 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்
04:41 PM (IST) Dec 18
நாடு முழுவதும் உள்ள தபால் அலுவலகங்களில் தங்கப்பத்திரங்கள் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது
04:00 PM (IST) Dec 18
திருச்செந்தூரில் விடாமல் கொட்டித்தீர்த்த கனமழையால் அங்குள்ள முருகன் கோவில் முழுவதும் வெள்ள நீரால் சூழப்பட்ட வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.
03:47 PM (IST) Dec 18
பொதுத்துறை வங்கிகளின் ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் உயருமா என்ற கேள்விக்கு மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளது
03:37 PM (IST) Dec 18
03:24 PM (IST) Dec 18
தென் மாவட்ட கனமழை மீட்பு பணிகளில் இந்திய இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது
03:14 PM (IST) Dec 18
03:11 PM (IST) Dec 18
01:47 PM (IST) Dec 18
தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், வாட்ஸ் அப், ட்விட்டரில் பாதிப்புகளை தெரிவித்து தேவையான உதவிகளை கோரலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது
01:38 PM (IST) Dec 18
90களில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வந்த பெப்சி உமா தன் வாழ்க்கையில் நடந்த சில சுவாரஸ்ய சம்பவங்கள் பற்றி மனம்திறந்து பேசி இருக்கிறார்.
01:23 PM (IST) Dec 18
நீரிழிவு சிகிச்சைக்கான மருந்தை தேங்காய் நீரின் மூலம் கண்டுபிடித்த பொள்ளாச்சி விவேகானந்தனுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பாராட்டு தெரிவித்துள்ளார்
12:53 PM (IST) Dec 18
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டபடி இன்றிரவு டெல்லி செல்கிறார்
12:48 PM (IST) Dec 18
12:41 PM (IST) Dec 18
லிங்குசாமி இயக்கிய சண்டக்கோழி திரைப்படம் வெளியாகி 18 ஆண்டுகள் ஆகும் நிலையில், அதுகுறித்த நெகிழ்ச்சி பதிவை போட்டுள்ளார் விஷால்.
12:35 PM (IST) Dec 18
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களில் மீட்பு பணிகளை பார்வையிட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செல்லவுள்ளார்
12:25 PM (IST) Dec 18
12:15 PM (IST) Dec 18
மழை வெள்ள நிவாரணம் ரூ.6000 இழப்பீட்டு தொகையை பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்
12:10 PM (IST) Dec 18
விஜய் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன குஷி படத்தில் முதன்முதலில் நடிக்க இருந்த ஹீரோ பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.
11:41 AM (IST) Dec 18
நாடு முழுவதும் 4 மாநிலங்களில் உள்ள 19 இடங்களில் தேசிய புலனாய்வு முகமையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்
11:19 AM (IST) Dec 18
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை புரட்டி போட்டு வரும் நிலையில், மழை இன்னும் முடிவடையவில்லையெனவும், இன்று முழுவதும் பெய்ய இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
11:18 AM (IST) Dec 18
கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு உதவிட வேண்டும் என திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்
11:04 AM (IST) Dec 18
கனமழை பெய்து வரும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் இன்று (18.12.2023) இயக்கப்பட மாட்டாது என அனைத்து ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்க தலைவர் அ.அன்பழகன் அறிவித்துள்ளார்.
10:56 AM (IST) Dec 18
கலைஞர் நூற்றாண்டு விழா அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில், அதற்காக தனுஷ், நயன்தாரா, சாய் பல்லவி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
10:55 AM (IST) Dec 18
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வாவில் லஷ்கர்-இ-தொய்பா ஆட்சேர்ப்பு பயங்கரவாதி ஹபிபுல்லா மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
10:52 AM (IST) Dec 18
கோரம்பள்ளம் குளம் உடைந்து தூத்துக்குடியை நகரப்பகுதியை நோக்கி நீர் வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
10:26 AM (IST) Dec 18
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது
10:17 AM (IST) Dec 18
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் வரலாறு காணாத அளவில் கனமழை பெய்துள்ளது. ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரேநாளில் பெய்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் மீட்புப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து 7,500 பேர் மீட்கப்பட்டு, 84 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகளுக்காக கூடுதல் படகுகள் அனுப்பப்பட்டுள்ளன. மீட்புப்பணிகளுக்காக ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளின் உதவி கோரப்பட்டுள்ளது என்று தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
10:12 AM (IST) Dec 18
முக்கிய எச்சரிக்கை:
திருநெல்வேலி மாவட்டம் அணைகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு தாமிரபரணி ஆற்றில் அதிகப்படியான மழை நீர் தற்போது (17.12.2023 நேரம் இரவு 10.00 மணி) வந்து கொண்டிருப்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களை நிவாரண முகாம்களுக்குக் கொண்டு செல்லும் பணியினை வருவாய்த்துறை, காவல்துறை, உள்ளாட்சித் துறை, மகளிர் திட்டம், பொதுப்பணித்துறை, தீயணைப்புத் துறை மற்றும் அனைத்து துறைகளும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தந்து தங்களது குடியிருப்புகளிலிருந்து வெளியேறிப் பாதுகாப்பான பகுதிகளுக்கு /அருகிலுள்ள நிவாரண முகாம்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
மாவட்ட ஆட்சியர், தூத்துக்குடி