MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • புத்தாண்டன்று வெளியிட வெங்கட் பிரபு பொத்தி பொத்தி பாதுகாத்து வைத்திருந்த தளபதி 68 படத்தின் டைட்டில் லீக்கானது?

புத்தாண்டன்று வெளியிட வெங்கட் பிரபு பொத்தி பொத்தி பாதுகாத்து வைத்திருந்த தளபதி 68 படத்தின் டைட்டில் லீக்கானது?

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்திற்கு வைக்கப்பட்டுள்ள தலைப்பு குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Dec 18 2023, 09:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vijay starrer Thalapathy 68

Vijay starrer Thalapathy 68

நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தளபதி 68. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். விஜய் நடித்த பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தான் இப்படத்தையும் தயாரிக்கிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் நடிகர் விஜய் உடன் மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், அஜ்மல், வைபவ், பிரேம்ஜி, பிரசாந்த் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. 

24
venkat prabhu, vijay

venkat prabhu, vijay

தளபதி 68 படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒன்றில் இளமை தோற்றத்தில் வருகிறாராம். இதற்காக டீ ஏஜிங் டெக்னாலஜி பயன்படுத்தி விஜய்யை இளமையாக காட்ட முடிவெடுத்த வெங்கட் பிரபு அதற்காக விஜய்யுடன் அமெரிக்கா சென்று அங்குள்ள முன்னணி நிறுவனம் ஒன்றுடன் இணைந்து இதற்கான பணிகளையும் மேற்கொண்டார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
Thalapathy 68 title leaked

Thalapathy 68 title leaked

அதில் நடிகர்கள் விஜய், பிரபுதேவா, பிசாந்த் ஆகியோர் கலந்துகொண்ட பாடல்காட்சி படமாக்கப்பட்டது. இதையடுத்து தாய்லாந்து சென்ற படக்குழு, அங்கு அதிரடி ஆக்‌ஷன் காட்சி ஒன்றை படமாக்கிவிட்டு அண்மையில் சென்னை திரும்பியது. தற்போது தளபதி 68 திரைப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தளபதி 68 படத்திற்காக வைக்கப்பட்டுள்ள தலைப்பு ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

44
Thalapathy 68 title Boss

Thalapathy 68 title Boss

அதன்படி இப்படத்திற்கு பாஸ் என்று பெயரிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதுவும் உறுதியான டைட்டில் இல்லையாம். இதனுடன் மேலும் இரண்டு டைட்டில்களையும் வைத்திருக்கிறார்கள் அதில் எது உறுதியாகிறதோ அதனை தான் வருகிற புத்தாண்டன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறார்களாம். தளபதி 68 படத்திற்காக தேர்வு செய்யப்பட்ட மூன்று டைட்டில்களில் இருந்து ஒரு டைட்டில் லீக் ஆகி உள்ளதால் படக்குழு அதிர்ச்சியடைந்து உள்ளது.

இதையும் படியுங்கள்... இனி நடிக்க கூடாதுனு தடுத்தாரா சிவக்குமார்? மும்பையில் செட்டில் ஆனது ஏன்? பொசுக்குனு உண்மையை போட்டுடைத்த ஜோதிகா

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved