Asianet News TamilAsianet News Tamil

கிரிக்கெட் கிரவுண்டில் பேரனின் பிறந்தநாள் விழா... தடபுடலாக கொண்டாடிய ரஜினிகாந்த் - வைரல் வீடியோ இதோ

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பேரன் வேத் கிருஷ்ணாவின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது.

Rajinikanth daughter soundarya son ved Krishna Birthday celebration video viral gan
Author
First Published May 20, 2024, 11:02 AM IST

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் அவரது மூத்த மகளான ஐஸ்வர்யா சினிமாவில் இயக்குனராக வலம் வருகிறார். இவர் நடிகர் தனுஷை கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். சுமார் 18 ஆண்டுகள் தனுஷுடன் சேர்ந்து வாழ்ந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கடந்த 2022-ம் ஆண்டு தாங்கள் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக அறிவித்தார்.

இதேபோல் ரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யாவின் முதல் திருமணமும் விவாகரத்தில் தான் முடிந்தது. இவருக்கு அஸ்வின் என்பவருடன் கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த ஜோடிக்கு வேத் கிருஷ்ணா என்கிற ஆண் குழந்தையும் பிறந்தது. இதையடுத்து கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் அவரை கடந்த 2017-ம் ஆண்டு விவாகரத்து செய்து பிரிந்தார் செளந்தர்யா. இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு விஷாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் செளந்தர்யா.

இதையும் படியுங்கள்... எடுத்த எல்லா படமும் ஹிட்டு... ஒரே படத்தில் 1000 கோடி வசூல் அள்ளிய முதல் கோலிவுட் இயக்குனர்- யார் இந்த பிரபலம்?

செளந்தர்யா - விஷாகன் ஜோடிக்கு கடந்த 2022-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் என பெயரிட்டு உள்ளனர். ரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யாவும் சினிமாவில் இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர் இயக்கத்தில் இதுவரை கோச்சடையான், வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இதில் கோச்சடையான் திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய பேரன் வேத் கிருஷ்ணாவின் பிறந்தநாள் விழாவை தடபுடலாக கொண்டாடி இருக்கிறார். சென்னையில் உள்ள தனியாருக்கு சொந்தமான டர்ப் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து தன்னுடைய மகனின் பிறந்தநாள் விழாவை கொண்டாடி உள்ளார் செளந்தர்யா ரஜினிகாந்த். இதில் ரஜினியின் மனைவி லதா உள்பட குடும்பத்தினர் கலந்துகொண்டனர். கிரிக்கெட் தீமில் கொண்டாடப்பட்ட இந்த பர்த்டே பார்ட்டியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 
இதையும் படியுங்கள்... Irfan : மனைவி வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? பார்ட்டி வைத்து அறிவித்த இர்ஃபான் - ஷாக் ஆன ரசிகர்கள்

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios