- Home
- Gallery
- எடுத்த எல்லா படமும் ஹிட்டு... ஒரே படத்தில் 1000 கோடி வசூல் அள்ளிய முதல் கோலிவுட் இயக்குனர்- யார் இந்த பிரபலம்?
எடுத்த எல்லா படமும் ஹிட்டு... ஒரே படத்தில் 1000 கோடி வசூல் அள்ளிய முதல் கோலிவுட் இயக்குனர்- யார் இந்த பிரபலம்?
இயக்குனராக அறிமுகமாகி 10 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வரும் பிரபலத்தின் குழந்தைப் பருவ புகைப்படம் வைரலாகி வருகிறது.

Atlee
சிவகார்த்திகேயன் நடித்த முகப்புத்தகம் என்கிற குறும்படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் அட்லீ. இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர், பின்னர் கடந்த 2013-ம் ஆண்டு வெளிவந்த ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். ஆர்யா, நஸ்ரியா, நயன்தாரா, ஜெய் நடிப்பில் வெளிவந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானதை தொடர்ந்து அடுத்த படத்திலேயே அட்லீக்கு கிடைத்த ஜாக்பாட் விஜய்யின் தெறி படம்.
Director Atlee
இரண்டாவது படத்திலேயே விஜய் போன்ற முன்னணி நட்சத்திரத்தை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அதை சரியாக பயன்படுத்திக் கொண்ட அட்லீ, விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து அப்படத்தை ஹிட்டாக்கினார். தெறி படத்தின் வெற்றியால் விஜய்க்கும் அட்லீ மீது நம்பிக்கை வந்தது. அந்த நம்பிக்கையின் வெளிப்பாடாக தான் தனது மெர்சல், பிகில் என அடுத்தடுத்து இரண்டு பட வாய்ப்புகளை வழங்கினார் விஜய்.
Atlee Kumar
அந்த இரண்டு படங்களும் வசூல் வேட்டை நடத்தி அட்லீ - விஜய் கூட்டணிக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுத்தது. தமிழில் தொடர்ந்து நான்கு ஹிட் படங்களை இயக்கிய அட்லீ அடுத்ததாக பாலிவுட்டில் இருந்து அழைப்பு வந்தது. அதுவும் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதையும் படியுங்கள்... Thalapathy 69 : தேசிய விருது வென்ற நடிகையுடன் ஜோடி சேருகிறாரா விஜய்? தளபதி 69 படம் பற்றி வெளிவந்த ஹாட் அப்டேட்
Vijay, Atlee, Shah Rukh khan
கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட அட்லீ, சுமார் 4 ஆண்டுகள் தீயாக வேலை செய்து, ஷாருக்கானுக்கு ஒரு தரமான கமர்ஷியல் ஹிட் படத்தை கொடுத்தார். அவர்கள் கூட்டணியில் வெளிவந்த ஜவான் திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனதோடு பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.
Atlee next movie
கோலிவுட்டின் டாப் இயக்குனர்களாக இருக்கும் மணிரத்னம், ஷங்கர், முருகதாஸ் போன்றவர்களுக்கே ஆயிரம் கோடி வசூல் என்பது எட்டாக் கனியாக இருந்து வரும் நிலையில், இயக்குனர் அட்லீ தன்னுடைய ஐந்தாவது படத்திலேயே அந்த மைல்கல்லை எட்டிப்பிடித்து பலரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தினார்.
Atlee photos
தற்போது பான் இந்தியா அளவில் அதிக மவுசு உள்ள இயக்குனராகவும் அட்லீ இருக்கிறார். அவரது கால்ஷீட்டை வாங்க பாலிவுட் ஹீரோக்கள் கியூவில் நின்றாலும் அவர் தன்னுடைய அடுத்த படத்தை புஷ்பா படத்தின் நாயகன் அல்லு அர்ஜுனை வைத்து இயக்க உள்ளார். அப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
Atlee childhood Photo
இப்படி கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கி வரும் இயக்குனர் அட்லீயின் குழந்தைப் பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது. அதில் கோர்ட் சூட் போட்டு முகம் நிறைய புன்னகையோடு டிப் டாப்பாக போஸ் கொடுத்திருக்கிறார் அட்லீ, அந்த புகைப்படத்திற்கு லைக்குகளும் குவிந்து வருகின்றன.
இதையும் படியுங்கள்... Kamal : குதிரையில் இந்தியன் தாத்தா.. Indian 2 ரிலீஸ் தேதி.. முதல் சிங்கள் அப்டேட் - வெளியிட்ட உலக நாயகன்!