MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Irfan : மனைவி வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? பார்ட்டி வைத்து அறிவித்த இர்ஃபான் - ஷாக் ஆன ரசிகர்கள்

Irfan : மனைவி வயிற்றில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? பார்ட்டி வைத்து அறிவித்த இர்ஃபான் - ஷாக் ஆன ரசிகர்கள்

இந்தியாவில் குழந்தை பிறக்கும் முன்னர் அது என்ன குழந்தை என்கிற விவரத்தை வெளியிடுவது சட்டவிரோதமாக இருக்கும் நிலையில், யூடியூப்பர் இர்பான் தனக்கு பிறக்கப் போவது என்ன குழந்தை என அறிவித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : May 20 2024, 10:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
irfan

irfan

சினிமா மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்களுக்கு நிகராக தற்போது யூடியூப்பர்களும் பிரபலமாகிவிட்டனர். தமிழ் நாட்டில் புகழ்பெற்ற யூடியூப்பர்களில் ஒருவராக இருப்பவர் இர்ஃபான். இவருக்கு யூடியூப்பில் கிட்டத்தட்ட 39 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். யூடியூப்பில் தினசரி வீடியோ பதிவிட்டு வரும் இர்பான் அதன் மூலம் பல லட்சம் சம்பாதித்து வருகிறார். இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்து முடிந்தது.

24
irfans view

irfans view

ஆலியா என்பவரை திருமணம் செய்துகொண்ட இர்ஃபான், திருமணத்துக்கு பின்னர் தன் மனைவியுடன் சேர்ந்து பல்வேறு வீடியோக்களை யூடியூப்பில் வெளியிட்டு வருகிறார். அதுமட்டுமின்றி தற்போது நடைபெற்று வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளராகவும் களமிறங்கி உள்ளார் இர்ஃபான். இந்த நிலையில் அவர் நேற்று வெளியிட்டு யூடியூப் வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... எடுத்த எல்லா படமும் ஹிட்டு... ஒரே படத்தில் 1000 கோடி வசூல் அள்ளிய முதல் கோலிவுட் இயக்குனர்- யார் இந்த பிரபலம்?

34
Youtuber irfan

Youtuber irfan

ஏனெனில், அந்த வீடியோவில் தனக்கு பிறக்க உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிவித்து இருக்கிறார். இர்ஃபானின் மனைவி ஆலியா தற்போது கர்ப்பமாக உள்ளார். அவர்களுக்கு என்ன குழந்தை உள்ளது என்பதை ஒரு பார்ட்டி வைத்து அறிவித்து இருக்கிறார் இர்ஃபான். அவர் தனக்கு பெண் குழந்தை தான் வேண்டும் என்று சொல்ல, அவரது மனைவி ஆலியா தனக்கு ஆண் குழந்தை வேண்டும் என்று பதிலுக்கு சொல்ல, இருவருக்கும் இடையே பலூன் சுடும் போட்டி நடத்தப்பட்டது. அதில் இர்பான் தான் வெற்றி பெற்றார்.

44
irfan baby gender reveal party

irfan baby gender reveal party

இறுதியாக ஸ்கேன் முடிவுகளின் படி தங்களுக்கு பெண் குழந்தை தான் பிறக்க உள்ளது என்பதை அறிவித்தார் இர்ஃபான். இந்தியாவில் குழந்தை பிறக்கும் முன்னரே அது என்ன குழந்தை என்பதை வெளியிடுவது சட்டப்படி குற்றமாக இருக்கும் நிலையில், இர்ஃபான் மட்டும் எப்படி வெளியிட்டார் என்பது பலரது கேள்வியாக இருக்கலா. அங்கு தான் ட்விஸ்டே இருக்கிறது. அவர் துபாய்க்கு குடும்பத்துடன் சென்று, அங்கு ஸ்கேன் செய்து தனது மனைவி வயிற்றில் இருக்கும் குழந்தை பற்றிய தகவலை வெளியிட்டு இருக்கிறார். அங்கு இதற்கு அனுமதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Thalapathy 69 : தேசிய விருது வென்ற நடிகையுடன் ஜோடி சேருகிறாரா விஜய்? தளபதி 69 படம் பற்றி வெளிவந்த ஹாட் அப்டேட்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
யூடியூபர் இர்பான்

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved