MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Thalapathy 69 : தேசிய விருது வென்ற நடிகையுடன் ஜோடி சேருகிறாரா விஜய்? தளபதி 69 படம் பற்றி வெளிவந்த ஹாட் அப்டேட்

Thalapathy 69 : தேசிய விருது வென்ற நடிகையுடன் ஜோடி சேருகிறாரா விஜய்? தளபதி 69 படம் பற்றி வெளிவந்த ஹாட் அப்டேட்

நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமான தளபதி 69-ல் நடிக்க உள்ள நடிகை பற்றிய அப்டேட் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : May 20 2024, 08:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Thalapathy Vijay

Thalapathy Vijay

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது கோட் திரைப்படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ந் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஒட்டி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
H vinoth, vijay

H vinoth, vijay

கோட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 69 படத்தின் ஆரம்பக்கட்ட பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்க உள்ளார். இப்படத்தில் நடித்து முடித்து பின்னர் நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளதால் தளபதி 69 படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. அப்படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறதாம்.

இதையும் படியுங்கள்... Kamal : குதிரையில் இந்தியன் தாத்தா.. Indian 2 ரிலீஸ் தேதி.. முதல் சிங்கள் அப்டேட் - வெளியிட்ட உலக நாயகன்!

34
Aparna Balamurali

Aparna Balamurali

அந்த வகையில் தளபதி 69 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை அபர்ணா பாலமுரளி ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கவில்லையாம். இவர் ஏற்கனவே தமிழில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக சூரரைப் போற்று படத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் அபர்ணா பாலமுரளி நடித்த பொம்மி கதாபாத்திரம் வேறலெவலில் கொண்டாடப்பட்டதோடு, அப்படத்திற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.

44
Aprana Balamurali in Thalapathy 69

Aprana Balamurali in Thalapathy 69

சூரரைப் போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தனுஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ராயன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் அபர்ணா பாலமுரளி. இப்படம் வருகிற ஜூன் மாதம் 12-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. சூரரைப் போற்று படத்தில் இடம்பெற்றதை போல் தளபதி 69 படத்திலும் அபர்ணா பாலமுரளிக்கு ஸ்ட்ராங் ஆன கதாபாத்திரம் இருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... "சென்னையில் முளைத்த ஆசை.. கார் தான் என் முதல் காதலி".. தன் பிரம்மாண்ட Car Collection பற்றி பேசிய நாக சைதன்யா!

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved