இனி நடிக்க கூடாதுனு தடுத்தாரா சிவக்குமார்? மும்பையில் செட்டில் ஆனது ஏன்? பொசுக்குனு உண்மையை போட்டுடைத்த ஜோதிகா
சூர்யாவின் தந்தை சிவக்குமார் உடன் ஏற்பட்ட மோதலால் தான் நடிகை ஜோதிகா மும்பையில் செட்டில் ஆனதாக சர்ச்சை எழுந்து வந்த நிலையில், அதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.

jyothika, sivakumar
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா, கடந்த 2006-ம் ஆண்டு நடிகை ஜோதிகாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணத்துக்கு முதலில் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தாலும் பின்னர் வேறு வழியின்றி ஒத்துக்கொண்டனர். சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது திருமணம் செய்துகொண்ட ஜோதிகா, திருமணத்துக்கு பின்னர் சினிமாவை விட்டு விலகினார். இதற்கு சூர்யாவின் குடும்பத்தினர் கொடுத்த அழுத்தமே காரணம் என கூறப்பட்டது.
sivakumar, jyothika, Suriya
பின்னர் 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் நடிக்க வந்து தன்னைப்பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஜோதிகா. இதையடுத்து பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜோதிகா, அண்மையில் குடும்பத்தினருடம் மும்பையில் செட்டில் ஆனார். அங்கு 70 கோடிக்கு சொந்தமாக வீடு வாங்கி அங்கு தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் குடியேறினார் ஜோதிகா. இதனால் மீண்டும் சர்ச்சை வெடித்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
jyothika about sivakumar
ஜோதிகா சினிமாவில் நடிப்பது பிடிக்காமல் சிவக்குமார் எதிர்ப்பு தெரிவித்ததால் தான் அவர் சூர்யா உடன் மும்பையில் குடியேறியதாக வதந்திகள் உலாவந்தன. இந்நிலையில், சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து சூசகமாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, பளீச் விளக்கத்தை கொடுத்துள்ளார் ஜோதிகா. அதன்படி அவர் கூறியதாவது : “சூர்யா வீட்டில் எனக்கு ரொம்ப சப்போர்ட்டாக இருந்ததே அப்பா சிவக்குமார் தான். அண்மையில் தான் மலையாளத்தில் மம்முட்டியோடு நடித்த காதல் தி கோர் திரைப்படத்தை தன் நண்பர்களுக்கு போட்டுக்காட்டி தன்னை அவர் ரசித்துப் பாராட்டியதாக கூறி தன்னைப்பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
Suriya wife jyothika
மும்பைக்கு குடியேறியது பற்றி பேசிய ஜோதிகா, திருமணத்துக்கு பின்னர் 15 வருஷமா சென்னையில் தான் இருந்தேன். கல்யாணம் ஆனா பெண்கள் பிறந்த வீட்டை மறந்துவிட வேண்டும் என்று எழுதப்படாத விதி ஒன்று இங்கே இருக்கிறது. கொரோனா காலகட்டத்தில் என்னுடைய பெற்றோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களுக்காக அடிக்கடி சென்னையில் இருந்து மும்பைக்கு சென்றுவர வேண்டிய சூழல் இருந்தது. இதையடுத்து அவர்களுக்காக மும்பையில் செட்டில் ஆகலாம் என சொன்னதும் சூர்யாவும் ஓகே சொல்லிவிட்டார். அவர் வீட்டிலும் எதிர்க்கவில்லை. மேலும் இது தற்காலிகமானது தான் எனவும் சென்னைக்கு திரும்ப வந்துவிடுவேன் என்றும் ஜோதிகா விளக்கம் அளித்துள்ளார்.
இதையும் படியுங்கள்... மறுபடியும் திருமணம் செய்யும் ஐடியா இருக்கா? ரசிகரின் கேள்விக்கு புள்ளி விவரத்துடன் சமந்தா சொன்ன ஷாக்கிங் பதில்