MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • மறுபடியும் திருமணம் செய்யும் ஐடியா இருக்கா? ரசிகரின் கேள்விக்கு புள்ளி விவரத்துடன் சமந்தா சொன்ன ஷாக்கிங் பதில்

மறுபடியும் திருமணம் செய்யும் ஐடியா இருக்கா? ரசிகரின் கேள்விக்கு புள்ளி விவரத்துடன் சமந்தா சொன்ன ஷாக்கிங் பதில்

ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் வாயிலாக கலந்துரையாடிய நடிகை சமந்தா, தான் இரண்டாவது திருமணம் பற்றி யோசிக்காதது ஏன் என விளக்கம் அளித்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Dec 18 2023, 08:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
samantha

samantha

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. 10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் வெற்றிகரமான நாயகியாக நிலைத்து நிற்கும் சமந்தாவுக்கு இல்லற வாழ்க்கை என்பது சரிவர அமையவில்லை. சினிமாவில் அறிமுகமான புதிதில் நடிகர் சித்தார்த்தை உயிருக்கு உயிராக காதலித்தார் சமந்தா. இவர்கள் திருமணம் செய்துகொள்ள உள்ளார்கள் என்றெல்லாம் பேச்சு அடிபட்டது. ஆனால் இறுதியில் இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதால் பிரேக் அப் செய்து பிரிந்தனர்.

24
samantha ruth prabhu

samantha ruth prabhu

இதையடுத்து நடிகர் நாக சைதன்யா மீது காதல் வயப்பட்டார் சமந்தா. இவர்கள் இருவரும் சில ஆண்டுகள் காதலித்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு குடும்பத்தினர் சம்மதத்துடன் கோவாவில் வைத்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பின்னர் இருவருமே சினிமாவில் பிசியாக நடித்து வந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு திடீரென இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு பிரிந்து வாழத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் இருவருமே சமாதானம் ஆகும் முடிவுக்கு வராததால் விவாகரத்து செய்வதாக அறிவித்து தங்கள் திருமண உறவை முறித்துக் கொண்டனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
samantha about second marriage

samantha about second marriage

சமந்தா உடனான பிரிவுக்கு பின்னர் நடிகர் நாக சைதன்யா, நடிகை சோபிதாவை காதலித்து வருவதாக செய்திகள் உலா வந்தன. அவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் பேச்சு அடிபட்டது. ஆனால் இருவருமே தங்கள் காதல் குறித்து அறிவிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர். மறுபுறம் நடிகை சமந்தாவும் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்துள்ளதாக அடிக்கடி கிசுகிசுக்கள் உலா வந்த வண்ணம் இருக்கின்றன.

44
samantha insta post

samantha insta post

இந்த நிலையில், நேற்று ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் வாயிலாக நடிகை சமந்தா கலந்துரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் மறுபடியும் திருமணம் செய்துகொள்ளும் ஐடியா இருக்கா என சமந்தாவிடம் கேள்வி எழுப்பினார். இதற்கு புள்ளி விவரத்துடன் பதில் அளித்துள்ளார் சமந்தா. புள்ளி விவரத்தின் படி அது தவறான முடிவு என தெரிவித்துள்ள அவர், 2023-ம் ஆண்டு நிலவரப்படி முதல் திருமணம் செய்துகொண்டவர்களின் விவாகரத்து சதவீதம் 50 என்றும், இரண்டாவது திருமணம் செய்துகொண்டவர்களின் விவாகரத்து சதவீதம் 67 எனவும் மூன்றாவது திருமணம் செய்துகொண்டவர்களின் விவாகரத்து சதவீதம் 73 என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் தனக்கு இரண்டாம் திருமணம் செய்துகொள்ளும் ஐடியா சுத்தமாக இல்லை என்பதை உறுதிபட கூறி உள்ளார் சமந்தா.

இதையும் படியுங்கள்... நயன்தாராவை விட டபுள் மடங்கு சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கும் ஜோதிகா - அவரின் Net worth இவ்வளவா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சமந்தா ரூத் பிரபு
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved