ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு செல்லும் அந்த 2 அணிகள் எது? ஆர்சிபி டிராபியை கைப்பற்ற அதிக வாய்ப்பு – ஹர்பஜன் சிங்!
ஐபிஎல் 2024 தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் 2 அணிகள் என்னென்ன என்பது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கணித்துள்ளார்.
Royal Challengers Bengaluru vs Rajasthan Royals, Eliminator
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 17ஆவது சீசனின் லீக் போட்டிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. இந்த தொடரில் இடம் பெற்ற 10 அணிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்துள்ளன. நாளை ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றின் முதல் தகுதிச் சுற்று போட்டி தொடங்குகிறது.
Royal Challengers Bengaluru vs Rajasthan Royals, Eliminator
இதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி நாளை அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும். தோல்வி அடையும் அணியானது 2ஆவது தகுதிச் சுற்று போட்டியில், எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் விளையாடும். எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி 22 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
Royal Challengers Bengaluru vs Rajasthan Royals, Eliminator
இந்தப் போட்டியில் தோல்வி அடையும் அணி தொடரிலிருந்து வெளியேறும். இந்த நிலையில் தான் இறுதிப் போட்டிக்கு செல்லும் அந்த 2 அணிகள் என்னென்ன என்பது குறித்து சீனியர் வீரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரருமான ஹர்பஜன் சிங் கணித்துள்ளார்.
Royal Challengers Bengaluru vs Rajasthan Royals- Eliminator
ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும். அப்படி நடந்தால் கோலி மற்றும் கம்பீர் இருவரும் ஒருவருக்கொருவர் சந்திக்க நேரிடும். கடைசியாக விளையாடிய 6 போட்டியிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி பெற்றது. அதே எனர்ஜியோடு விளையாடினால் முதல் முறையாக டிராபியை வெல்ல முடியும். ஆர்சிபியை கட்டுப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.