MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • குஷி படவாய்ப்பை தட்டி பறித்தாரா தளபதி? விஜய்க்கு முன் அதில் நடிக்க இருந்தது இவர்தானாம்! வெளியான சீக்ரெட் தகவல்

குஷி படவாய்ப்பை தட்டி பறித்தாரா தளபதி? விஜய்க்கு முன் அதில் நடிக்க இருந்தது இவர்தானாம்! வெளியான சீக்ரெட் தகவல்

விஜய் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன குஷி படத்தில் முதன்முதலில் நடிக்க இருந்த ஹீரோ பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.

2 Min read
Author : Ganesh A
| Updated : Dec 18 2023, 12:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
kushi

kushi

அஜித்தின் வாலி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா. இப்படம் அஜித்தின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி இப்படத்தின் மூலம் தான் ஜோதிகா என்கிற அழகான ஹீரோயின் தமிழ் சினிமாவுக்கு கிடைத்தார். வாலி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா இயக்கிய திரைப்படம் குஷி. இப்படத்தில் விஜய் ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஜோதிகா நடித்த இப்படம் கடந்த 2000-ம் ஆண்டு வெளியானது.

24
kushi vijay

kushi vijay

காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட ஈகோவால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகிறது என்பதை அழகாக காட்டி இருந்தார் எஸ்.ஜே.சூர்யா. இப்படமும் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றதோடு, நடிகர் விஜய்யின் கெரியரில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இவ்வளவு பெரிய வெற்றியை பெற்ற இப்படத்தில் முதன்முதலில் நடிக்க இருந்தது விஜய் இல்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா... ஆனால் அது தான் உண்மை. இதில் நடிக்க இருந்த ஹீரோ பற்றியும் இப்படம் விஜய்க்கு எப்படி வந்தது என்பது பற்றியும் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
PL Thenappan

PL Thenappan

இதுகுறித்து தேனப்பன் கூறியதாவது : “குஷி படத்துக்கு முன் நான் விஜய் சாருக்கு அட்வான்ஸ் கொடுத்திருந்தேன். அந்த சமயத்தில் மின்சார கண்ணா படத்தின் ஷூட்டிங்கிற்காக சுவிட்சர்லாந்து சென்றிருந்தபோது, விஜய் என்னிடம் வந்து வாலி படம் ரொம்ப சூப்பரா இருக்கு, அந்த இயக்குனர் எஸ்.ஜே.சூர்யாவை சந்தித்து கதை இருக்கானு கேட்க சொன்னார். அதையடுத்து நான் எஸ்.ஜே சூர்யாவை சந்தித்து பேசினேன்.

அவர் தான் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் ஒரு படம் பண்ண போறேன், அதுல பிரபுதேவா ஹீரோவா நடிக்கப்போறார்னு சொன்னார். ரத்னம் என் நண்பர் என்பதால் நானும் விஜய் இவ்வாறு எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுவதை கூறினேன். அவரும் சரி பேசிக்கலாம்னு சொன்னார். இதையடுத்து ஒரு மாதம் லண்டனுக்கு சுற்றுலா சென்றுவிட்டேன். 

44
Thalapathy Vijay and prabhu deva

Thalapathy Vijay and prabhu deva

சுற்றுலா முடிஞ்சி திரும்ப வந்து பார்த்தபோது ஏ.எம்.ரத்னம் தயாரிப்புல எஸ்.ஜே.சூர்யா டைரக்‌ஷன்ல விஜய் நடிக்க போறார்னு அறிவிப்பு வருது. அப்பறம் தான் பிரபுதேவாவை மாற்றி அவருக்கு பதில் விஜய்யை நடிக்க கமிட் ஆனது எனக்கு தெரியவந்தது. சரி நமக்கு கிடைக்குறது தான் கிடைக்கும் என நானும் அவர்களிடம் எதுவும் சொல்லிக்கொள்ளவில்லை” என தேனப்பன் கூறி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... களைகட்டப்போகும் கலைஞர் 100 விழா... தனுஷ், நயன்தாரா, சாய் பல்லவிக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தளபதி விஜய்
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved