MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • ரஜினி, ஷாருக்கான் படங்களை ரிஜெக்ட் பண்ணிய பெப்சி உமா... பார்சலில் வந்த விரல்! பெப்சி உமாவை பதறவைத்த சம்பவம்

ரஜினி, ஷாருக்கான் படங்களை ரிஜெக்ட் பண்ணிய பெப்சி உமா... பார்சலில் வந்த விரல்! பெப்சி உமாவை பதறவைத்த சம்பவம்

90களில் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வந்த பெப்சி உமா தன் வாழ்க்கையில் நடந்த சில சுவாரஸ்ய சம்பவங்கள் பற்றி மனம்திறந்து பேசி இருக்கிறார்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Dec 18 2023, 10:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Pepsi Uma

Pepsi Uma

சின்னத்திரை மூலம் பிரபலம் ஆனவர்கள் ஏராளம் இருக்கலாம். ஆனால் அதன் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்கள் வெகு சிலரே. அந்த பட்டியலில் முன்னணியில் இருப்பவர் பெப்சி உமா. சின்னத்திரையில் ஒரு பெண் தொகுப்பாளர் 15 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் என்றால் அந்த சாதனைக்கு சொந்தக்காரர் பெப்சி உமா தான். பெப்சி உங்கள் சாய்ஸ் என்கிற ஒரே நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார் பெப்சி உமா.

25
Anchor Pepsi Uma

Anchor Pepsi Uma

தெளிவான தமிழ் உச்சரிப்பு, ஹோம்லி லுக் என இவரை பார்த்தவுடன் அனைவருக்கும் பிடித்துப்போகும். அந்த அளவுக்கு தனது நிகழ்ச்சிக்கு போன் செய்பவர்களிடம் அன்புடன் பேசுவார். பெப்சி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் ஆள் அட்ரஸே இல்லாமல் தொலைந்து போனார் பெப்சி உமா. அதன் பின் அவர் எந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கவில்லை. அதோடு இவர் தனக்கு கிடைத்த சினிமா வாய்ப்புகளையும் தொடர்ந்து நிராகரித்து வந்தார். அதற்கான காரணம் பற்றி சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்துகொண்டபோது கூறி இருக்கிறார் உமா.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

35
TV anchor pepsi Uma

TV anchor pepsi Uma

குறிப்பாக மதுரையில் இருந்து தீவிர ரசிகை ஒருவர் பெப்சி உமாவிற்கு பார்சல் ஒன்றை அனுப்பி இருந்தாராம். அந்த பார்சலில் வெட்டப்பட்ட நிலையில் ஒரு சுண்டு விரல் இருந்ததாம். அதைப்பார்த்து பதறிப்போன பெப்சி உமா, அந்த சம்பவம் தனக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறினார். மேலும் சினிமா வாய்ப்புகளை நிராகரித்தது பற்றி பேசிய அவர், சல்மான் கான் மற்றும் ஷாருக்கான் படத்தில் நடிக்க அழைத்தும் நோ சொல்லிவிட்டதாக கூறினார்.

45
Pepsi uma rejected movies

Pepsi uma rejected movies

அதுமட்டுமின்றி, கோலிவுட்டில் பாரதிராஜா, கே.பாலச்சந்தர் போன்ற ஜாம்பவான் இயக்குனர்கள் அழைத்தும் நடிக்க மறுத்துவிட்டாராம். அதோடு, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் 2 படங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததாம். அதையும் ஏற்க மறுத்துவிட்ட பெப்சி உமா, தனக்கு நடிப்பில் சுத்தமாக ஈடுபாடு இல்லாததால் தான் இத்தனை வாய்ப்புகளையும் நிராகரித்ததாக கூறி இருக்கிறார்.

55
Rajini about pepsi uma

Rajini about pepsi uma

ஒரு முறை ரஜினியே தனக்கு போன் போட்டு வாழ்த்திய தருணம் பற்றி நெகிழ்ந்து பேசியுள்ளார் உமா. ரஜினி போன் போட்டதும், அது என்னன்னே தெரியலைங்க உங்க பக்கத்தில் பிரபலங்கள் நின்றாலும் கண்ணு தானாகவே உங்கள் பக்கம் திரும்பி உங்களை தான் பார்க்குது” என அவர் பாராட்டியதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார் பெப்சி உமா.

இதையும் படியுங்கள்... சண்டக்கோழிக்கு வயசு 18... அந்த படமே ஒரு மேஜிக் தான் - உற்சாகம் பொங்க விஷால் போட்ட நெகிழ்ச்சி பதிவு

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பெப்சி உமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved