தேமுதிகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் திருவேற்காட்டில் இன்று நடைபெற்று வருகிறது. இதில், தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் நியமனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

10:28 PM (IST) Dec 14
இந்தியாவில் விமானக் கட்டணங்கள் தேவை மற்றும் வழங்கல் கொள்கையைப் பின்பற்றி நிர்ணயிக்கப்படுபவை என மத்திய அரசு நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது
10:10 PM (IST) Dec 14
#Breaking சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தை 4 வாரங்களுக்கு வெளியிட தடை. கேஜேஆர் ஸ்டூடியோ நிறுவனம் பதில் அளிக்க உத்தரவு
10:07 PM (IST) Dec 14
திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்
07:11 PM (IST) Dec 14
தமிழ்நாடு அரசு மிக்ஜாம் புயல் பாதிப்பு நிவாரணப் பணிகளை மிகச் சிறப்பாக மேற்கொண்டுள்ளது என புயல் பாதிப்பு பகுதிகளை ஆய்வு மேற்கொண்ட ஒன்றிய குழுவின் தலைவர் குணால் சத்யாத்ரி தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்
06:52 PM (IST) Dec 14
மக்களுடன் முதல்வர் எனும் புதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் வருகிற 18ஆம் தேதி கோவையில் தொடங்கி வைக்கவுள்ளார்
06:11 PM (IST) Dec 14
தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது
05:07 PM (IST) Dec 14
மக்களவையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு விளக்கம் கோரிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொத்து கொத்தாக பணியிடை நீக்கம் வருகின்றனர்
03:21 PM (IST) Dec 14
நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு விவகாரத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் 8 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்
03:19 PM (IST) Dec 14
இந்தியை தொடர்ந்து திணிப்பது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்
03:13 PM (IST) Dec 14
நடிகர் சூரி மதுரையில் தான் நடத்தி வரும் அம்மன் உணவகம் சார்பில் வெள்ள நிவாரண நிதி வழங்கி இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
02:38 PM (IST) Dec 14
காசி விஸ்வநாதர் கோயில் வளாகம் புதுப்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன
02:23 PM (IST) Dec 14
தமிழ் திரையுலகில் கவனிக்கத்தக்க வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் லிவ்விங்ஸ்டன் கிறிஸ்த்துவ மதம் போர் அடித்துவிட்டதால் இந்து மதத்திற்கு மாறி இருக்கிறார்.
01:33 PM (IST) Dec 14
கோவா விமான நிலையத்தில் இந்தி மொழி விவகாரத்தில் தமிழ்நாட்டு பெண்ணுக்கு நேர்ந்த அவமதிப்புக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
01:17 PM (IST) Dec 14
12:50 PM (IST) Dec 14
தேமுதிகவின் பொருளாளராக 2018ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பிரேமலதா விஜயகாந்த், தற்போது பொதுச் செயலாளராகியுள்ளார். பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டதும் விஜயகாந்த் காலில் விழுந்து பிரேமலதா ஆசிபெற்றார்.
12:47 PM (IST) Dec 14
தேமுதிகவின் புதிய பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்வு செய்யப்படுவதாக பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
11:58 AM (IST) Dec 14
11:15 AM (IST) Dec 14
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் குவிந்து வரும் நிலையில் கேரளாவில் திடீரென கொரோனா தொற்று அதிகரித்து வருவது பக்தர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
11:14 AM (IST) Dec 14
நாடாளுமன்றத்தில் நேற்றைய பாதுகாப்பு குளறுபடி சம்பவத்தில் ஈடுபட்ட ஏழு பேரை மக்களவைச் செயலகம் சஸ்பெண்ட் செய்தது
11:12 AM (IST) Dec 14
எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்பது போல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் mid week eviction நடந்துள்ளதாகவும் அதில் அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
10:33 AM (IST) Dec 14
லியோ படத்தில் விஜய்க்கு மகளாக நடித்த இயலின் ஒரிஜினல் தந்தையான பிரபல காமெடி நடிகர் அர்ஜுனன் தனக்கு மூன்றாவது குழந்தை பிறந்துள்ளதை அறிவித்துள்ளார்.
09:32 AM (IST) Dec 14
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள சலார் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஜோசியம் பார்த்து மாற்றப்பட்டதாக அப்படத்தின் தயாரிப்பாளர் கூறி உள்ளார்.
09:07 AM (IST) Dec 14
விழுப்புரம் அருகே அரசு உயர்நிலைப் பள்ளியில் செல்போனில் ஆபாச படம் காட்டி மாணவிக்கு பாலியல் தொந்தரவு தந்த தமிழ் ஆசிரியர் மகேஸ்வரன்(40) போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
09:06 AM (IST) Dec 14
வெளிநாட்டில் இருந்து சம்பாதித்து கொடுத்த பணத்தை ஆண் நண்பர்களுடன் சேர்ந்து மதுகுடித்துவிட்டு ஓவராக ஆட்டம் போட்ட மனைவியை கணவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
07:33 AM (IST) Dec 14
எண்ணூரில் கச்சா எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்டுள்ள 5,852 குடும்பங்களுக்கு ரூ.6000 வெள்ள நிவாரணத்துடன் கூடுதல் நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு சென்னை மாநகராட்சி பரிந்துரை செய்துள்ளது.
07:33 AM (IST) Dec 14
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனுக்கு நடிகர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
07:32 AM (IST) Dec 14
தேமுதிகவின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் திருவேற்காட்டில் இன்று நடைபெறுகிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்க வாய்ப்புள்ளது.
07:32 AM (IST) Dec 14
சென்னையில் 572வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.