தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

06:26 PM (IST) Sep 11
மாலத்தீவு அதிபர் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் பார்வையிட்டார்
06:08 PM (IST) Sep 11
ஜவான் திரைப்படம் 4 நாட்களில் 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளதாக, தயாரிப்பு நிறுவனம் அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும் படிக்க
05:29 PM (IST) Sep 11
'ஒரே நாடு ஒரே தேர்தல்' பிரசாரம் ஐந்து மாநிலங்களில் தேர்தலை தள்ளி வைப்பதை நோக்கமாகக் கொண்டது என உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் குற்றம் சாட்டியுள்ளார்
04:27 PM (IST) Sep 11
எழரை லட்சம் கோடி ஊழலுக்கு பதில் சொல்ல வக்கில்லாமல் ஒவ்வொரு நாளும் புதிய பிரச்சினைகளை பாஜகவினர் கிளப்புவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
03:56 PM (IST) Sep 11
உதயநிதி தலைக்கு விலை வைத்தவர் போலி சாமியார் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
03:52 PM (IST) Sep 11
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீர் என இன்று மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹீமை சந்தித்து பேசியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் படிக்க
03:08 PM (IST) Sep 11
இயக்குனர் செல்வராகவன் 10 ஆண்டுகளுக்கு முன் போட்ட பதிவுக்கு நடிகை திரிஷா அண்மையில் ரிப்ளை செய்துள்ளது இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
02:20 PM (IST) Sep 11
சீரியல் நடிகை காயத்ரி யுவராஜின் வளைகாப்பு நிகழ்வு கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
01:42 PM (IST) Sep 11
சரவணா ஸ்டோர் உரிமையாளரும், நடிகருமான லெஜண்ட் சரவணனும், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் நெருங்கிய உறவினர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
01:27 PM (IST) Sep 11
திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கொசுவர்த்தி சுருள் படத்தை பகிர்ந்துள்ளார்
01:26 PM (IST) Sep 11
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்
01:26 PM (IST) Sep 11
உங்கள் தலைமை மற்றும் தொலைநோக்கு பார்வை 2030இன் கீழ், சவுதி அரேபியா மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை கண்டுள்ளது என சவுதி அரேபியா பட்டத்து இளவரசரை பிரதமர் மோடி புகழ்ந்து பேசியுள்ளார்
01:26 PM (IST) Sep 11
ஜி20 உச்சி மாநாட்டில் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் பேசும் புகைப்படம் வைரலாகி வருகிறது
01:25 PM (IST) Sep 11
குஜராத் மாநிலத்தை சேர்ந்த புவன் பாம் என்பவர் இந்தியாவின் பணக்கார யூ-டியூபராக அறியப்படுகிறார். அவரது சொத்து மதிப்பு ரூ.122 கோடி.
12:44 PM (IST) Sep 11
மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கி உள்ளே வர முடியாதவர்களுக்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் எக்ஸ் தளத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
12:40 PM (IST) Sep 11
நடிகை ஐஸ்வர்யா ராய் அந்தரங்க விஷயத்தின் போது எப்படி இருப்பார் என, வெளிப்படையாக பேட்டி ஒன்றில் கூறியுள்ள தகவல் சமூக வலைத்தளத்தியில் பெரும் பொருளாக மாறியுள்ளது. மேலும் செய்திகள்
12:26 PM (IST) Sep 11
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது அருந்ததியர்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் ஈரோடு நீதிமன்றத்தில் இன்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜர்.
12:19 PM (IST) Sep 11
50MP கேமரா மற்றும் 8GB RAM கொண்ட realme C51 ஸ்மார்ட்போன் மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது. இதன் விலை மற்றும் முக்கிய அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.
11:53 AM (IST) Sep 11
ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
11:37 AM (IST) Sep 11
புதிய ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிள் இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் விலை குறைந்த ஹார்லி பைக் எக்ஸ் 440 ஆகும். அதன் விலை மற்றும் பிற அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.
10:53 AM (IST) Sep 11
சென்னையில் நடைபெற்ற ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் குளறுபடிகள் ஏற்பட்டதற்காக அந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
10:33 AM (IST) Sep 11
ஊழல் வழக்கில் சிறை சென்ற சந்திரபாபு நாயுடு சிறைக்கு சென்ற நிலையில், பட்டாசு வெடித்து அமைச்சர் ரோஜா கொண்டாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
10:11 AM (IST) Sep 11
சிறையில் வீட்டில் சமைத்த உணவு, மருந்து சாப்பிட ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
09:50 AM (IST) Sep 11
பவர்பாய்ண்ட்டை உருவாக்கிய டென்னிஸ் ஆஸ்டின் 76 வயதில் காலமானார். பிரபலங்கள் முதல் தொழில் அதிபர்கள் வரை பலரும் அவரது மறைவுக்கு இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
09:19 AM (IST) Sep 11
சென்னை மந்தவெளி மற்றும் எழும்பூர் பகுதியில் முன் விரோதம் காரணமாக நேற்று இரவு நடு ரோட்டில் இரண்டு பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
08:54 AM (IST) Sep 11
கனமழை காரணமாக 10 ரயில்களின் வழித்தடங்களை இந்திய ரயில்வே திருப்பிவிட்டுள்ளது. இதன் முழு பட்டியலை இங்கு காணலாம்.
08:42 AM (IST) Sep 11
சென்னையில் நடைபெற்ற மறக்குமா நெஞ்சம் இசைநிகழ்ச்சியில் ஏற்பாடுகள் சரியில்லாததால் பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக ரசிகர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
08:23 AM (IST) Sep 11
ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. இது தமிழக எல்லையிலும் பதற்றத்தை அதிகமாக்கி உள்ளது.
08:15 AM (IST) Sep 11
வார விடுமுறையையொட்டி சுற்றுலா சென்றுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பும் போது வேனில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய வாகனத்தை ஓரமாக நிறுத்தப்பட்டது. அப்போது வேகமாக வந்த டிப்பர் லாரி மோதி சம்பவ இடத்திலியே 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
07:52 AM (IST) Sep 11
எட்டு நாட்களுக்கு முன்பு, ஒரு எம்.எல்.ஏ மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உட்பட 10 பாஜக தலைவர்கள் மாநிலத்தில் எதிர்க்கட்சிக்கு மாறியுள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
07:22 AM (IST) Sep 11
உலக சுகாதார நிறுவன எச்சரிக்கைக்குப் பிறகு இந்தியாவில் கண்காணிக்கப்பட வேண்டிய 2 மருந்துகளின் தவறான பதிப்பு விற்பனை செய்யப்படுகிறது.
07:09 AM (IST) Sep 11
சென்னையில் மின்சார பராமரிப்பு பணிக்காக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2மணி வரை ராயபுரம் பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் மின் தடை செய்யப்பட இருப்பதாக மி்ன்சார வாரியம் அறிவித்துள்ளது.
06:45 AM (IST) Sep 11
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி போட்டியில் மேத்வதேவை வீழ்த்தி பட்டம் வென்றார் நோவக் ஜோகோவிச்.