சிறையில் வீட்டில் சமைத்த உணவு, மருந்து சாப்பிட ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு சிமெண்ட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த போது ரூபாய் 317 கோடி ஊழல் நடந்ததாக புகார் எழுந்துள்ளது.சந்திரபாபு நாயுடு ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு துறையில் ஊழல் நடந்திருப்பதாக கூறி கடந்த 9ஆம் தேதி அதிகாலை 3.30 மணி அளவில் அவரை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்காக விஜயவாடாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

இதன் காரணமாக ஆந்திரா முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தரும்படி சிஐடி போலீசார் தரப்பில் நீதிமன்றத்தில் முறையிட்டது.

இந்த மனு மீதான விசாரணை விஜயவாடா நீதிமன்றத்தில் 8 மணிநேரமாக நடைபெற்றது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், ஊழல் வழக்கில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திராபாபு நாயுடுவை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அவருக்கு செப்டம்பர் 22 ஆம் தேதிவரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்ட நிலையில் சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.

நீதிமன்ற தடுப்புக்காவல் உத்தரவின்படி, சந்திரபாபு நாயுடு மீதான குற்றச்சாட்டுகளை நம்புவதற்கு காரணங்கள் இருப்பதாகவும், விசாரணையை முடிக்க 24 மணிநேரம் போதாது என்றும் நீதிபதி எடுத்துரைத்தார். வீட்டில் சமைத்த உணவு, மருந்து, மற்றும் ஒரு சிறப்பு அறை ஆகியவை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் என் சந்திரபாபு நாயுடு சிறையில் பதினைந்து நாட்கள் தங்குவதற்கு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட வசதிகளில் அடங்கும். 

Scroll to load tweet…

ஆந்திர மாநிலம் அமராவதியில் உள்ள ஏசிபி நீதிமன்றம், 73 வயதான நாயுடுவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறப்படுவதைக் கருத்தில் கொண்டு அவரை தனித்தனியாக தங்க வைக்குமாறு ராஜமகேந்திராவரம் மத்திய சிறைக் கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டது.

விநாயகர் சதுர்த்தி சர்ப்ரைஸ்.. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. முழு விபரம் இதோ !!

“அன்னைக்கே சொன்னேன்.. மாரிமுத்து செஞ்ச ஒரே தப்பு இதுதான்” ஜோதிடர் கிளப்பிய சர்ச்சை.. பரபரப்பு பேட்டி