Jawan: குறிச்சி வச்சிக்கோங்க..! இன்னும் ஒரே நாள் தான்! 'ஜெயிலர்' ஆல் டைம் வசூலை பீட் பண்ண போகும் 'ஜவான்'!
ஜவான் திரைப்படம் 4 நாட்களில் 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளதாக, தயாரிப்பு நிறுவனம் அதிகார பூர்வமாக தெரிவித்துள்ளது.
ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில் 'கிங்கான்' ஷாருக்கான் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் செப்டம்பர் 7 ஆம் தேதி, 'ஜவான்' திரைப்படம், ரசிகர்களின் மிகபெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் வெளியானது.
'ஜவான்' படம் வெளியானது முதலே ஒரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வந்தாலும், மற்றொரு தரப்பினரோ... இப்படம் பல படங்களில் இருந்து காப்பி அடிக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ளதாக குற்றம்ச்சாட்டி வருகிறார்கள். எனினும் வசூலில் எந்த வித பாதிப்பும் இன்றி, திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக ஓடி வருகிறது ஜவான். குறிப்பாக வட இந்தியாவில், இப்படம் 1000 கோடியை எட்டும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள்.
மலேசிய பிரதமருடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு! பின்னணி என்ன? வைரலாகும் போட்டோஸ் மற்றும் வீடியோஸ்!
ரசிகர்களின் நம்பிக்கைக்கு ஏற்றாப்போல், ஒவ்வொரு நாளும் வசூலில் கெத்து காட்டி வருகிறது 'ஜவான்'. ‘ஜவான்’ படம் வெளியாகி 2-ஆவது நாளில், இந்திய திரையுலக வரலாற்றில் வசூலில் புதிய சாதனையை நிகழ்த்தியது. ஒரே நாளில் இந்திப் பதிப்பு 68.72 கோடி ரூபாயையும், உலகளவில் 144.22 கோடி ரூபாயையும் வசூலித்துள்ளது. எந்த ஒரு இந்திய திரைப்படமும் இதற்கு முன்பு இத்தகைய வசூல் சாதனையை நிகழ்த்தியதில்லை என்பது குறிப்பிடதக்கது.
இதை தொடர்ந்து, ஷாருக்கானின் ஜவான் நான்கே நாட்களில் உலகளவில், 520.79 கோடி வசூலித்துள்ளதாக, தயாரிப்பு தரப்பு அதிகார பூர்வமாக, புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த தகவல் ஷாருக்கானின் ரசிகர்களை உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் இதுவரை 600 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த வசூலை ஜவான் இன்னும் ஒரே நாளில் முறியடித்துவிடும் என எதிர்பார்ப்படுகிறது. ஜெட் வேகத்தில் ஜவான் பட வசூல் எகிறி வருகிறது. இதற்க்கு முக்கிய காரணம் "இயக்குநர் அட்லீ இத்திரைப்படத்தில் கிங்கான் ஷாருக்கானை இதுவரை ரசிகர்கள் கண்டிராத தோற்றத்தில் மாஸாக காட்சிப்படுத்தியுள்ளார். அதே போல் ஆக்சன், ரொமான்ஸ், காமெடி, இரண்டு விதமான கதாப்பாத்திரம், பலவிதமான லுக் என ஷாருக்கான் ரசிகர்களுக்கு இப்படம் மிகப்பெரிய ட்ரீட்டாக அமைந்துள்ளது எனலாம்".
இந்த படத்தில் வெறித்தனமான வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ள நிலையில், யோகிபாபு நேர்த்தியாக தன்னுடைய காமெடி கதாபாத்திரத்தை அலங்கரித்துள்ளார். இசையமைப்பாளர் அனிருத்தின் இசை படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்துள்ளது. உலகம் முழுக்க ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் ஜவான் திரைப்படம் 1000 கோடி வசூலை எட்டி பிடிக்குமா? பதான் சாதனையை முறியடிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அந்தரங்க விஷயத்தில் கணவருடன் இப்படி இருக்கவே எனக்கு பிடிக்கும்? கூச்சமின்றி கூறிய ஐஸ்வர்யா ராய்..!