நான் ரெடி தான் வரவா... 10 ஆண்டுகளாக வெயிட் பண்ணி செல்வராகவனுக்கு கிரீன் சிக்னல் காட்டிய திரிஷா
இயக்குனர் செல்வராகவன் 10 ஆண்டுகளுக்கு முன் போட்ட பதிவுக்கு நடிகை திரிஷா அண்மையில் ரிப்ளை செய்துள்ளது இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
selvaraghavan, trisha
துள்ளுவதோ இளமை படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி தொடர்ந்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி, மயக்கம், ஆயிரத்தில் ஒருவன் போன்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் செல்வராகவன். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் சில படங்களை இயக்கி உள்ளார். அந்த வகையில் தெலுங்கில் இவர் இயக்கிய ஒரு மாஸ்டர் பீஸ் படம் தான் ஆடவாரி மாட்டலக்கு அர்தாலே வெருலே.
venkatesh, trisha
கடந்த 2007-ம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில் வெங்கடேஷ் நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக இப்படத்தில் நடிகை திரிஷா நடித்திருந்தார். தெலுங்கில் இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதை அடுத்து கன்னடம், தமிழ், போஜ்புரி, ஒடியா போன்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. குறிப்பாக தமிழில் இப்படத்தை யாரடி நீ மோகினி என்கிற பெயரில் ரீமேக் செய்திருந்தார் இயக்குனர் மித்ரன் ஜவஹர்.
இதையும் படியுங்கள்... நிறைமாத நிலவே வா வா...! கோலாகலமாக நடந்து முடிந்த நடிகை காயத்ரி யுவராஜின் வளைகாப்பு - வைரலாகும் போட்டோஸ்
selvaraghavan and actress Trisha
தனுஷ், நயன்தாரா நடிப்பில் வெளியான இப்படம் தமிழிலும் சக்கைப்போடு போட்டு பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதனிடையே கடந்த 2013-ம் ஆண்டு இயக்குனர் செல்வராகவன், ஆடவாரி மாட்டலக்கு அர்தாலே வெருலே படத்தை நீண்ட நாட்களுக்கு பின் பார்த்ததாகவும், வெங்கடேஷ் மற்றும் திரிஷாவுடன் பணியாற்றிய தருணங்கள் அருமையாக இருந்தது. அதன் இரண்டாம் பாகத்தை எடுத்தாலும் கவலைப்பட தேவையில்லை” என பதிவிட்டிருந்தார்.
Trisha reply to selvaraghavan
செல்வராகவன் தன்னை வாழ்த்தி பதிவிட்ட இந்த பதிவுக்கு கடந்த 10 ஆண்டுகளாக ரிப்ளை செய்யாமல் இருந்த நடிகை திரிஷா, நேற்று திடீரென பதிலளித்துள்ளார். அவர் இரண்டாம் பாகம் குறித்து அதில் பதிவிட்டுள்ளதை பார்த்த நடிகை திரிஷா, நான் ரெடி என சொல்லி கிரீன் சிக்னல் காட்டி இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள், ரொம்ப சீக்கிரமா ரிப்ளை பண்ணிருக்கீங்க என நடிகை திரிஷாவை கிண்டலடித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... வெற்றிமாறனுடன் மீண்டும் இணையும் சூரி..! ஹரோயினாக ரோஷ்னி மற்றும் பிரகிடா? வெளியான போட்டோஸ்!