அந்தரங்க விஷயத்தில் கணவருடன் இப்படி இருக்கவே எனக்கு பிடிக்கும்? கூச்சமின்றி கூறிய ஐஸ்வர்யா ராய்..!
நடிகை ஐஸ்வர்யா ராய் அந்தரங்க விஷயத்தின் போது எப்படி இருப்பார் என, வெளிப்படையாக பேட்டி ஒன்றில் கூறியுள்ள தகவல் சமூக வலைத்தளத்தியில் பெரும் பொருளாக மாறியுள்ளது.
நடிகை ஐஸ்வர்யா ராய், 1994 ஆம் ஆண்டு, சரியாக தன்னுடைய 21 வயதில், உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டவர். இதை தொடர்ந்து, இவரை நடிகையாக இருவர் படத்தில் அறிமுகப்படுத்திய பெருமை, இயக்குனர் மணிரத்னத்தையே சேரும். தன்னுடைய முதல் படத்திலேயே மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்தார். எம்.ஜி.ஆர் - கலைஞர் கருணாநிதி வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட, 'இருவர்' படத்தில், ஜெயலலிதாவை பிரதிபலிக்கும் வேடத்தில் நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராய்.
இந்த படத்தை தொடர்ந்து, இந்த அழகியை பாலிவுட் படங்களில் நடிக்க வைக்க.. பல இந்தி பட இயக்குனர்கள் போட்டி போட்டனர். மேலும் இவர் இந்தியில் நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட்டாகவே ஷாருக்கான், சல்மான் கான், ரித்திக் ரோஷன், அமீர் கான் என அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி போட்டு நடித்தார், தமிழ் ஹிந்தி மட்டும் இன்றி, பெங்காலி, ஆங்கிலம் போன்ற மொழிப் படங்களிலும் நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராய்.
ஐஸ்வர்யா ராய் எந்த அளவுக்கு வேகமாக பிரபலமாக மாறினாரோ... அதே வேகத்தில் பல சர்ச்சைகளில் சிக்கி உள்ளார். நடிகர் சல்மான் கானுடன் ஐஸ்வர்யா ராய் இணைந்து நடித்த படங்கள் வெற்றி பெற்றது மட்டும் இன்றி, இவர்களின் கெமிஸ்ட்ரியும் அதிகம் ரசிகர்களை ஈர்த்தது. எனவே இருவரும் நிஜத்திலும் இணைந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் நினைத்தனர். அதற்க்கு ஏற்றாப்போல்... சல்மான் கான் - ஐஸ்வர்யா ராய் இருவருமே தீவிரமாக காதலித்து வந்தனர்.
இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்பட்ட போதிலும், கருத்து வேறுபாடு காரணமாக 2001ஆம் ஆண்டு தங்களின் காதலை முறித்து கொண்டனர். சல்மான் கான், இவரை காதலிக்கும் போது ஷூட்டிங் ஸ்பாட்டில் அடித்து துன்புறுத்தி, கடுமையாக நடந்து கொண்டதாகவும் கூறப்பட்டது . அதே நேரம் சல்மான்கான் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்திருந்தார். அதாவது இருவருக்கும் இடையே ஒத்து போகாது என்பதை புரிந்து கொண்டு, உடன்பாடுடன் தான் பிரேக் அப் செய்ததாகவும் தெரிவித்தார்.
சீரியல் இனி செட் ஆகாது! நடிப்புக்கு குட்-பை சொல்லிட்டு புதிய தொழில் தொடங்கிய நடிகை நீலிமா ராணி!
சல்மான் கானுடனான பிரிவுக்கு பின்னர், 6 வருடங்கள் கழித்து 'குரு' படத்தில், ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் இருவரும் இணைந்து நடித்த போது, இருவரும் காதலிக்க துவங்கினர். 2007 ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனுடன் ஐஸ்வர்யா ராய்க்கு திருமணம் நடந்தது. தற்போது வரை பாலிவுட் திரையுலகே மெச்சும் நட்சத்திர ஜோடியாக இருந்து வரும் இவர்களுக்கு ஆராத்யா என்கிற மகள் ஒருவரும் உள்ளார்.
ஐஸ்வர்யா ராயை ஹீரோயினாக நடிக்க வைக்க பலமுனை போட்டி நிலவி வந்தாலும், மனதிற்கு பிடித்த கதாபாத்திரத்தை மட்டுமே ஏற்று நடிக்கிறார். அந்த வகையில் ஐஸ்வர்யா ராய், நீண்ட இடைவெளிக்கு பின்னர், இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படத்தில், நந்தினி கதாபாத்திரத்திலும், ஊமை தாய் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இந்த படத்தின் புரோமோஷன் பணியிலும் முழு வீச்சில் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் ரசிகர்கள் நீங்கள் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை பலர் வைத்ததை பார்க்க முடிந்தது.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் பேட்டி ஒன்றில், கணவருடன் அந்தரங்க உறவில் இருக்கும் போது எப்படி இருப்பார் என, கூறியுள்ள தகவல் சமூக வலைத்தளத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. இதுகுறித்து பேசியுள்ள ஐஸ்வர்யா ராய்.." உடலுறவின் போது இரண்டு பேரின் காதல் வெளிப்படையாக மட்டுமே இருக்க வேண்டும். இரு உடல் இணைவதற்காகவோ, ஜாலிக்காகவோ, அல்லது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக நடக்க கூடாது. ஒரு மனதாக சேர்ந்து பெருக்கெடுத்து ஓடும் காதலாக இருக்க வேண்டும். என்னுடன் என் கணவர் இருக்கும் போது ... அந்த நேரத்தில் நானும் என் கணவரும்
காதலை கொண்டாடுவது தான் எனக்கு பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.