லெஜண்ட் சரவணனுக்கு ஆளுநர் தமிழிசை என்ன உறவு தெரியுமா? இது தெரியாம போச்சே !!
சரவணா ஸ்டோர் உரிமையாளரும், நடிகருமான லெஜண்ட் சரவணனும், ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் நெருங்கிய உறவினர்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சரவணா ஸ்டோர் குழுமத்தின் உரிமையாளரான சரவணன் அருள் கடந்த ஆண்டு வெளியான தி லெஜண்ட் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகியிருந்தார். இப்படத்தை ஜே.டி - ஜெரி இயக்க பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது.
உலகம் முழுவதும் ரூ. 45 கோடி வசூல் செய்தது. ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. அதில் ஸ்ட்ரீமிங்கில் நம்பர் 1 இடத்தை பிடித்ததாக படக்குழு தெரிவித்திருந்தது.
சரவணன் அருள் தனது சமூக வலைதள பக்கத்தில் சமீபத்தில் புது கெட்டப்புடன் வெளியிட்ட புகைப்படம் வைரலானது. அதில் தாடி வைத்து இருந்தார். இந்நிலையில் குழந்தைகளுடன் சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். அப்போது தனது அடுத்த படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் லெஜண்ட் சரணவன் அருளும், ஆளும்பர் தமிழிசை சவுந்தரராஜனும் நெருங்கிய உறவினர்கள் என தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனும், தொழில் அதிபரும், நடிகருமான சரணவன் அருளும் உறவினர்களாம். லெஜண்ட் சரவணனின் மனைவிக்கு ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் அம்மா சித்தி உறவு என்று கூறப்படுகிறது.
இதை வைத்து பார்க்கும்போது, லெஜண்ட் சரவணன், தமிழிசைக்கு மருமகன் முறை வருகிறது. இவர்கள் இருவருக்கும் இடையே இப்படியொரு உறவா என்று ரசிகர்கள் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
“அன்னைக்கே சொன்னேன்.. மாரிமுத்து செஞ்ச ஒரே தப்பு இதுதான்” ஜோதிடர் கிளப்பிய சர்ச்சை.. பரபரப்பு பேட்டி