ஒரு ரன்னில் த்ரில் வெற்றி – காவ்யா மாறனை கையிலேயே பிடிக்க முடியல: துள்ளி குதித்த கொண்டாடிய வீடியோ வைரல்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான 50ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஒரு ரன்னில் த்ரில் வெற்றி பெற்றதை அணியின் துணை உரிமையாளரான காவ்யா மாறன் துள்ளிக் குதித்து கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.

Kavya Maran Reaction Trending in Social Media after Sunrisers Hyderabad Thrill won by 1 run difference against Rajasthan Royals in 50th IPL 2024 Match rsk

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் என்றாலே சட்டென்று நினைவிற்கு வருவது காவ்யா மாறன் தான். ஹைதராபாத் அணி விளையாடுவதை பார்க்கும் போது அவர் கொடுக்கும் ஒவ்வொரு ரியாக்‌ஷனையும் பார்க்க ரசிகர்கள் ஆவலாக காத்திருப்பார்கள். ரசிகர்கள் மட்டுமின்றி நெட்டிசன்களும் விமர்சிக்க ரெடியாகவே இருப்பார்கள். இவ்வளவு ஏன், ரஜினிகாந்த் கூட காவ்யா மாறன் ரியாக்‌ஷன் குறித்து பேசியிருந்தார்.

இந்த நிலையில் தான் நேற்று நடந்த 50ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஒரு ரன்னில் த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியை காவ்யா மாறன் துள்ளிக் குதித்து கொண்டாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 76 ரன்கள் எடுத்தார். டிராவிஸ் ஹெட் 58 ரன்கள் எடுத்தார். பின்னர் கடின இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஜோஸ் பட்லர் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ஜோட் பட்லர் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 3 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தார். அதன் பிறகு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரியான் பராக் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். இதில், ஜெய்ஸ்வால் 40 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பராக் தன் பங்கிற்கு அதிரடியாக விளையாடி 49 பந்துகளில் 8 பவுண்டரி, 4 சிக்ஸர் உள்பட 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷிம்ரன் ஹெட்மயர் 13 ரன்னிலும், துருவ் ஜூரெல் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் ராஜஸ்தான் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் புவனேஷ்வர் குமார் அந்த ஓவரை வீசினார்.

முதல் பந்தில் ஒரு ரன் எடுக்க, 2ஆவது பந்தில் 2 ரன் எடுக்கப்பட்டது. 3ஆவது பந்தில் பவுண்டரியும் அடிக்கப்பட்டது. 4ஆவது பந்தில் 2 ரன் எடுக்கப்பட்டது. 5ஆவது பந்தில் 2 ரன் எடுக்கப்பட்டது. கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பவல் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் எடுத்து ஒரு ரன்னில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை காவ்யா மாறன் எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை துள்ளிக் குதித்து கொண்டாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios