Asianet News TamilAsianet News Tamil

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 24வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை தட்டி தூக்கிய நோவக் ஜோகோவிச் !!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி போட்டியில் மேத்வதேவை வீழ்த்தி பட்டம் வென்றார் நோவக் ஜோகோவிச். இது அவர் வெல்லும் 24வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

US Open Final: Novak Djokovic clinches historic 24th Grand Slam title-rag
Author
First Published Sep 11, 2023, 6:40 AM IST

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நிலை வீரரான ஸ்பெயின் கார்லோஸ் அல்கரஸ், 3-ம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவுடன் மோதினார். 

இந்த போட்டியில் டேனியல் மேத்வதேவ் 7-6 (7-3), 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் அல்கரஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.மற்றொரு அரை இறுதியில் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 47-ம் நிலை வீரரான அமெரிக்காவின் பென் ஷெல்டனுடன் மோதினார். அமெரிக்க ஓபன் தொடர்களில் ஜோகோவிச்சுக்கு இது 100-வது ஆட்டமாக அமைந்திருந்தது.

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க பிளான் இருக்கா.. இந்தியாவின் டாப் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் - முழு விபரம் இதோ !!

US Open Final: Novak Djokovic clinches historic 24th Grand Slam title-rag

இதில் எளிதாக வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் நுழைந்தார். 3 முறை சாம்பியனான ஜோகோவிச் இறுதிப் போட்டியில் கால்பதிப்பது இது 10-வது முறை. 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்று குவித்துள்ள ஜோகோவிச், இந்த முறை வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்தது.

US Open Final: Novak Djokovic clinches historic 24th Grand Slam title-rag

இந்திய நேரப்படி இன்று அதிகாலை 1.40 மணி அளவில் இந்தப் போட்டி தொடங்கியது. சுமார் 3 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு மேல் இந்தப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் 6-3, 7-6(5), 6-3 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை தட்டி தூக்கினார்.

“அன்னைக்கே சொன்னேன்.. மாரிமுத்து செஞ்ச ஒரே தப்பு இதுதான்” ஜோதிடர் கிளப்பிய சர்ச்சை.. பரபரப்பு பேட்டி

Follow Us:
Download App:
  • android
  • ios