Andhra pradesh bandh : தமிழக எல்லையில் பதற்றம்: சந்திரபாபு நாயுடு கைது.. 144 தடை உத்தரவு - முழு விபரம் இதோ !!
ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. இது தமிழக எல்லையிலும் பதற்றத்தை அதிகமாக்கி உள்ளது.
ஆந்திராவில் தனது ஆட்சிக் காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் 371 கோடி ரூபாய் கைமாறியதில் ஊழல் நடந்ததாக முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். சந்திரபாபு நாயுடுவை கைது செய்த சிஐடி போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
கைது நடவடிக்கையால் ஆந்திராவில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதுடன். சாலைகளில் டயர்களை கொளுத்தி கைதும் செய்யப்பட்டனர்.
நடிகரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண், சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டார். மற்றொரு புறம் சந்திரபாபுவுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து உத்தரவிடப்பட்டது.
ஜாமீன் கோரி சந்திரபாபு நாயுடு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் சிறை உறுதியானது.பின்னர் சிறையில் அடைப்பதற்காக விஜயவாடாவிலிருந்து பலத்த பாதுகாப்புடன் காரில் அவரை ராஜமுந்திரிக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது கண்டித்து ஆந்திர மாநிலம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு தெலுங்கு தேசம் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இது ஆந்திராவில் மட்டுமல்ல, தமிழக எல்லையிலும் பதற்றத்தை உண்டாக்கி உள்ளது. ஆந்திரா எல்லை மாவட்டங்களான வேலூர், கிருஷ்ணகிரி, திருவள்ளூர் மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களிலும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனால் ஆந்திரா செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி சர்ப்ரைஸ்.. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. முழு விபரம் இதோ !!