சென்னையில் மின்சார பராமரிப்பு பணிக்காக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2மணி வரை ராயபுரம் பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் மின் தடை செய்யப்பட இருப்பதாக மி்ன்சார வாரியம் அறிவித்துள்ளது.
சென்னையில் இன்றைய மின் தடை எங்கே.?
மின்சார பராமரிப்பு பணிக்காக சென்னையில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சுமார் 5 மணி நேர மின்தடை செய்யப்படவுள்ளது. இது தொடர்பாக மின்சார வாரியம் வெளியிட்ட அறிக்கையில், பராமரிப்புப் பணிகளுக்காக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (11.09.2023) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
ராயபுரம் : அண்ணா பூங்கா, எம்சி ரோடு, என்என் கார்டன், கல்லறை சாலை, மசூதி தெரு, ஆண்டியப்ப முதலி தெரு, சிங்கார கார்டன் தெரு, வைகுண்ட நாடார் தெரு, தாண்டவ மூர்த்தி தெரு, என்ஆர்டி சாலை, வள்ளுவன் தெரு, கிழக்கு கல்மண்டபம் சாலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
Today Rasi Palan 11th September 2023: இன்றைய நாள் 12 ராசிக்காரர்களுக்கும் மோசமாக இருக்கும்!..ஆனால்..
