சுற்றுலா சென்று திரும்பிய வேன் மீது டிப்பர் லாரி மோதி விபத்து.. துடிதுடித்து பெண்கள் உட்பட 7 பேர் பலி

வார விடுமுறையையொட்டி தர்மஸ்தலாவிற்கு சுற்றுலா சென்றுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பும் போது வேனில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய வாகனத்தை ஓரமாக நிறுத்தப்பட்டது. அப்போது வேகமாக வந்த டிப்பர் லாரி மோதி சம்பவ இடத்திலியே 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

7 people died when a truck collided with a van near Tirupattur

சுற்றுலா வேன் விபத்து

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டைச் சேர்ந்த சுமார் 45 பேர் ஆன்மிக சுற்றுலாவாக தர்மஸ்தலாவிற்கு இரண்டு வேன்களில் சென்றுள்ளனர். இதனையடுத்து பல்வேறு இடங்களை சுற்றிப்பார்த்தவர்கள், நேற்று இரவு சொந்த ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது  திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அருகே வந்து கொண்டிருந்த போது வேனின் பின் டயர் பஞ்சர் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வேனை சாலை ஓரத்தில் நிறுத்தி ஓட்டுநர் பழுது பார்த்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது வேனில் இருந்த பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டோர் கீழே இறங்கி சென்டர் மீடியனில் அமர்ந்துள்ளனர்.

துடி துடித்து 7 பேர் பலி

அப்போது அதிவேகமாக வந்த டிப்பர் லாரி ஒன்று வேனின் பின்புறமாக பயங்கரமாக மோதியது. இதனால் அந்த வேன் அருகே சாலையில் அமர்ந்திருந்த பெண்கள் மீது  தூக்கி வீசப்பட்டது.  இதில் சம்பவ இடத்திலேயே 3 பெண்கள் உட்பட 7 பேர் துடி துடித்து பலியானர்கள். மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனவர்களை அந்த பகுதியில் உள்ளவர்களும் போலீசாரும் கடும் சிரமத்திற்கு மத்தியில் மீட்டனர். மேலும் இந்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துதிருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்

சினிமா பாணியில் நடந்த பயங்கரம்.. வீடு புகுந்து தூக்கிக்கொண்டிருந்த கல்லூரி மாணவனை காரில் கடத்திய கும்பல்..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios