சினிமா பாணியில் நடந்த பயங்கரம்.. வீடு புகுந்து தூக்கிக்கொண்டிருந்த கல்லூரி மாணவனை காரில் கடத்திய கும்பல்..!

 காலை ஏடி காலனி பகுதிக்குள் அதிவேகமாக நுழைந்த சொகுசு காரில் சென்ற மர்ம கும்பல் சுதாவின் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து அங்கு படுத்து தூங்கிக் கொண்டிருந்த குணசேகரனை வலுக்கட்டாயமாக தாங்கள் வந்த காரில் ஏற்றிக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்றனர். 

College student kidnapping in tiruppur tvk

பல்லடம் அருகே கல்லூரி மாணவனை வீடு புகுந்து மர்ம கும்பல் காரில் கடத்தி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூர் பெருந்தொழுவு ஏடி காலனி பகுதியில் வசித்து வருபவர் சுதா (40). இவரது கணவர் குமார் இறந்து சில ஆண்டுகள் ஆகிறது. இவர்களது மகன் குணசேகரன் (20). இவர் அவிநாசிபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை ஏடி காலனி பகுதிக்குள் அதிவேகமாக நுழைந்த சொகுசு காரில் சென்ற மர்ம கும்பல் சுதாவின் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து அங்கு படுத்து தூங்கிக் கொண்டிருந்த குணசேகரனை வலுக்கட்டாயமாக தாங்கள் வந்த காரில் ஏற்றிக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்றனர். 

இதையும் படிங்க;- வேறொருவருடன் உல்லாசம் அனுபவிக்கும் மனைவி.. பழிவாங்க ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டிய கணவன்.!

இதனை சற்றும் எதிர்பார்க்காத அப்பகுதியினர் மற்றும் தாய் அதிர்ச்சி அடைந்தனர். நடந்த சம்பவம் குறித்து கடத்தப்பட்ட மாணவனின் தாய் சுதா மற்றும் உறவினர்கள் பொதுமக்கள் அவிநாசிபாளையம் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் காதல் விவகாரம் ஏதும் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வீடு புகுந்து மாணவன் காரில் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க;- மசாஜ் சென்டரில் மஜாவாக நடந்த விபசாரம்.! அரை குறை ஆடைகளுடன் சிக்கிய பெண்கள்.! கல்லா கட்டிய பிசினஸ்க்கு ஆப்பு.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios