மலேசிய பிரதமருடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு! பின்னணி என்ன? வைரலாகும் போட்டோஸ் மற்றும் வீடியோஸ்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீர் என இன்று மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹீமை சந்தித்து பேசியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது மலேசியா சென்றுள்ள நிலையில், அங்கு மரியாதை நிமித்தமாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹீமை சந்தித்து பேசி உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சந்திப்பின் போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிகவும் எளிமையாக வெள்ளை நிற டீ-ஷர்ட் மற்றும் வேஷ்டி அணிந்துள்ளார்.மேலும் மலேசிய பிரதமர் ரஜினிகாந்திடம் சில நிமிடங்கள் சிரித்து பேசியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை மலேசிய பிரதமரே வெளியிட்டுள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம்... X பக்கத்தில் ரஜினிகாந்துடனான சந்திப்பின் போது எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு மலாய் மொழியில் போட்டுள்ள பதிவில், "ஆசிய மற்றும் சர்வதேச அளவில் கலை உலக அரங்கில் பரீட்சியமான பெயர் கொண்ட, இந்திய திரைப்பட நடிகரான ரஜினிகாந்த் அவர்களை சந்தித்தேன். அவர் எனக்கு அளித்த மரியாதையை நான் பாராட்டுகிறேன். எதிர்காலத்தில் அவரது படங்களில் நான் சேர்க்க முயற்சிக்கும் சமூக விஷயங்கள் தொடர்பாக விவாதித்தேன். ரஜினிகாந்த் தொடர்ந்து திரைப்படங்களில் சிறந்து விளங்க பிரார்த்திக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
வெற்றிமாறனுடன் மீண்டும் இணையும் சூரி..! ஹரோயினாக ரோஷ்னி மற்றும் பிரகிடா? வெளியான போட்டோஸ்!
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று, உலக அளவில் சுமார் 600 கோடியை எட்டியுள்ளது. மேலும் ரஜினிகாந்த் தன்னுடைய 170-ஆவது படத்தை, இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளார். விரைவில் இந்த படத்தின் படபிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தின் படபிடிப்பு துவங்குவதற்கு முன்பாகவே, ரஜினிகாந்த் நடிக்க உள்ள 171 வது படம் குறித்த அறிவிப்பு இன்று காலை வெளியானது. ஏற்கனவே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில்... அந்த தகவலை உறுதி செய்யும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் 'ஜெயிலர்' படத்தின் வெற்றிக்கு பின்னர், மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் 171 வது படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல் தற்போது மலேசிய பிரதமருடன் ரஜினிகாந்த் சந்தித்து பேசிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியுள்ள நிலையில், இந்த திடீர் சந்திப்பிற்கான பின்னணி என்ன என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகிறார்கள்.