Published : Jul 05, 2023, 07:14 AM ISTUpdated : Jul 06, 2023, 12:21 AM IST

Tamil News Live Updates: சரத் பவாரை கட்சியில் இருந்து நீக்கிய அஜித் பவார்

சுருக்கம்

சரத் பவாரை தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார் அஜித் பவார். இது மகாராஷ்டிரா அரசியலில் புது திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tamil News Live Updates: சரத் பவாரை கட்சியில் இருந்து நீக்கிய அஜித் பவார்

12:21 AM (IST) Jul 06

Chennai : போக்குவரத்து போலீசை தாக்க முயன்ற 3 பெண்கள்.. சென்னையில் பரபரப்பு - வைரல் வீடியோ

சென்னையில் நடுரோட்டில் டீ கடையில் நின்று கொண்டிருந்த நபர்களை செருப்பால் அடித்து விட்டு போக்குவரத்து காவல்துறை அதிகாரியை  தாக்க முயன்ற பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.

11:44 PM (IST) Jul 05

முதல்வர் ஸ்டாலின் இடத்தில் நான் இருந்திருந்தால்.. செந்தில் பாலாஜி குறித்து பேசிய ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ஆர்

எதிர்க்கட்சியினர்களிடையே ஒற்றுமை இருக்கின்றதா என்பது கேள்விக்குறியாக உள்ளது என்று கூறியுள்ளார் ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்.

11:11 PM (IST) Jul 05

OnePlus : ஒன்பிளஸ் Nord 3.. நார்ட் CE 3.. பட்ஸ் 2r - OnePlus நிறுவனம் அறிமுகப்படுத்தியது என்னென்ன?

OnePlus Nord 3 ரூ. 33,999, Nord Buds 2r ரூ. 2,199 விலையில் கிடைக்கும் என்று ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

10:22 PM (IST) Jul 05

School Leave : தொடரும் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - முழு விபரம்

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் கேரளாவில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

09:02 PM (IST) Jul 05

DMK : திமுக இளைஞரணியில் புதிய படை.! உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல் - புதிய நிர்வாகிகள் யார்?

தமிழ்நாடு முழுவதும் புதிய இளைஞரணி நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது திமுக.

08:41 PM (IST) Jul 05

Coimbatore: தனியார் கல்லூரி சுவர் இடிந்து விழுந்து ஐந்து பேர் பலியான சோகம் - 2 பேர் கைது

கோவை அருகே தனியார் கல்லூரியில் சுவர் இடிந்து விழுந்து ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

08:29 PM (IST) Jul 05

Senthil Balaji Case : அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு.. நாளை பிற்பகல்.! எகிறும் எதிர்பார்ப்பு.!!

செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டவுடன் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தக் கோரி, அவரது மனைவி மேகலா உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு  தாக்கல் செய்திருந்தார்.

07:17 PM (IST) Jul 05

Maruti Suzuki Invicto : பக்கா மைலேஜ்! செம பாதுகாப்பு.! மாருதி சுசூகி இன்விக்டோவின் சிறப்பு அம்சங்கள் என்ன?

இந்தியாவில் மாருதி சுசூகி இன்விக்டோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள், விலை மற்றும் பிற விவரங்களை காண்போம்.

06:41 PM (IST) Jul 05

ஆளுநர் அரசியல் பேசக்கூடாது.. ஆர்.எஸ் பாரதிக்கு தடாலடி பதில் கொடுத்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

ஆளுநர் தனது கடமையை செய்ய வேண்டும். அரசியல் பேசக் கூடாது என்று கூறியுள்ளார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை.

05:43 PM (IST) Jul 05

BREAKING : என்சிபி கட்சியின் தேசியத் தலைவர் பதவியில் இருந்து சரத் பவாரை நீக்குகிறார் அஜித் பவார்

என்சிபி கட்சியின் தேசியத் தலைவர் பதவியில் இருந்து சரத் பவாரை நீக்குகிறார் அஜித் பவார். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் மனுவை அளித்துள்ளார்.

05:26 PM (IST) Jul 05

ஆப்பிளில் டைப்-சி போர்ட்டா..! யாரும் எதிர்பார்க்காத பல வசதிகளுடன் வரும் iPhone 15 Pro & iPhone 15 Pro Max

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 சீரிஸ் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அதைப் பற்றி பல்வேறு விவரங்கள் கசிந்துள்ளது.

04:49 PM (IST) Jul 05

Mukesh Ambani : ஒரே நாளில் ரூ.19,000 கோடி சம்பாதித்த முகேஷ் அம்பானி.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள்!

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பானது, ஒரே நாளில் 2.35 பில்லியன் டாலர்கள் அதிகரித்துள்ளது. இது சுமார் 19,000 கோடி ரூபாய் ஆகும்.

04:27 PM (IST) Jul 05

கோவையில் ஆராய்ச்ச்சி மையத்தை அமைக்கும் மஹிந்திரா நிறுவனம்!

ஆட்டோமொபைல் துறையின் முன்னணி நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா-வின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் கோவையில் அமையவுள்ளது

04:26 PM (IST) Jul 05

பாஜக ஆட்சியில் பழங்குடியினர் மீதான வன்கொடுமைகள் அதிகரிப்பு: ராகுல் காந்தி!

பாஜக ஆட்சியில் பழங்குடியின சகோதர சகோதரிகள் மீதான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்

02:39 PM (IST) Jul 05

மதுரை உயர் நீதிமன்றக் கிளை கலைஞர் போட்ட பிச்சை.. உணர்ச்சிவசப்பட்டு பேசிட்டேன்.. வருத்தம் தெரிவித்த எ.வ.வேலு!

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அமைந்தது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி போட்ட பிச்சை என பேசியதற்கு அமைச்சர் எ.வ.வேலு வருத்தம் தெரிவித்தார். 

02:38 PM (IST) Jul 05

வாக்களித்த பொதுமக்களை கொச்சைப்படுத்துவது திமுகவுக்கு வாடிக்கையாக போச்சு! வேலுவுக்கு எதிராக சீறும் அண்ணாமலை.!

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அமைந்ததுது கலைஞர் போட்ட பிச்சை என அமைச்சர் எ.வ.வேலு பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். 

 

02:11 PM (IST) Jul 05

அபாய கட்டத்தைக் தாண்டிய உலக சராசரி வெப்பநிலை: அதிர்ச்சி தகவல்!

உலக சராசரி வெப்பநிலை அபாய கட்டத்தைக் கடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

02:10 PM (IST) Jul 05

குழந்தைகளை கைவிட்ட பெற்றோர்: சிங்கப்பூர் அரசு அதிரடி சட்டம்!

குழந்தைகளை கைவிட்ட பெற்றோர் திருத்தப்பட்ட சட்டத்தின் பலன்களை பெற முடியாது என சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது

02:10 PM (IST) Jul 05

மத்திய அமைச்சரவை மாற்றம்: யார் பதவிக்கு வேட்டு? வருண் காந்திக்கு சீட் மறுப்பு?

மத்திய அமைச்சரவை மாற்றத்தின்போது, சில அமைச்சர்களது பதவி பறிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

02:10 PM (IST) Jul 05

கார்கள் மீது மோதிய பாறை: 2 பேர் பலி - நெஞ்சை உலுக்கும் வீடியோ!

நாகாலாந்து மாநிலம் திமாபூர் அருகே நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த கார்கள் மீது பாறை மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்

02:09 PM (IST) Jul 05

அரசு மருத்துவர்கள் சரியான நேரத்திற்கு வர வேண்டும்: ககன்தீப்சிங் பேடி உத்தரவு!

அரசு மருத்துவர்கள் குறித்த நேரத்திற்கு வர வேண்டும் என காதாரத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்

02:09 PM (IST) Jul 05

பிறந்தநாள் கொண்டாடுவதில்லை: திருமண நிகழ்ச்சியில் அண்ணாமலை சுவாரஸ்யம்!

நான் எனது பிறந்தநாளை கொண்டாடுவதில்லை என திருமண நிகழ்ச்சியில்  பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்

01:50 PM (IST) Jul 05

முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கு! ஆளுநருக்கு சட்ட அமைச்சர் ரகுபதி கடிதம்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளின் விசாரணையை தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என்று ஆளுநர் ரவிக்கு, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதியுள்ளார்.

01:31 PM (IST) Jul 05

திடீரென சினிமாவை விட்டு விலக முடிவெடுத்த சமந்தா - காரணம் என்ன?

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் சமந்தா, சினிமாவை விட்டு தற்காலிகமாக விலக முடிவெடுத்துள்ளாராம்.

12:58 PM (IST) Jul 05

அமைச்சரோடு மாமன்னன் படம் பார்த்த திமுகவினர் ஓசியில் பாப்கார்ன் கேட்டு தகராறு; திரையரங்கில் அடிதடி

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவனுடன் மாமன்னன் படம் பார்க்கச் சென்ற திமுகவினர் திரையரங்கில் இனாமாக பாப்கார்ன் கேட்டு தகராறு செய்த நிலையில், அவர்கள் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

11:39 AM (IST) Jul 05

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் 3வது நீதிபதி நியமனம்

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் 3வது நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆட்கொணர்வு வழக்கில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு காரணமாக வழக்கு மூன்றாவது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. 

11:37 AM (IST) Jul 05

மெரினா சர்வீஸ் சாலை.. நாளை முதல் ஓரு வருடத்திற்கு மூடல்

சென்னை மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதால் நாளை முதல் ஒரு வருடத்திற்கு மெரினா கடற்கரையின் சர்வீஸ் சாலையில் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. 

11:23 AM (IST) Jul 05

எல்.சி.யூ.வில் தனுஷ்... திருப்பதியில் மொட்டை அடித்தது லியோ படத்துக்காக தானா? சர்ப்ரைஸ் அப்டேட் இதோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நாயகனாக நடித்து வரும் லியோ திரைப்படத்தில் நடிகர் தனுஷ் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

11:03 AM (IST) Jul 05

சளிக்கு யாருன்னா நாய் கடி ஊசி போடுவாங்களா? அந்த அளவுக்கு சீரழிந்து போச்சு மருத்துவத்துறை.. இபிஎஸ் விளாசல்.!

மேகதாது விவகாரத்தில் கர்நாடக மாநில காங்கிரஸ் புதிய நாடகத்தை அரங்கேற்றுகிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

11:02 AM (IST) Jul 05

Today Gold Rate in Chennai : இன்றைய தங்கம் விலை என்ன? வாங்க இதுதான் சரியான நேரமா?

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் விலை நிலவரத்தை காணலாம்.

10:33 AM (IST) Jul 05

சரத் vs அஜித்: யாருக்கு பலம்? மகாராஷ்டிராவில் இன்று கூட்டம்!

தேசியவாத காங்கிரஸ் கட்சி-க்குள் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், சரத் பவாரும், அஜித் பவாரும் தனித்தனியாக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை இன்று கூட்டியுள்ளனர்

10:32 AM (IST) Jul 05

அண்ணாமலை தலைமையில் 39 ஜோடிகளுக்கு திருமணம்!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் திண்டிவனத்தில் 39 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெறவுள்ளது

09:09 AM (IST) Jul 05

சுற்றுச்சுவர் இடிந்து 5 பேர் உயிரிழந்த விவகாரம்.. 3 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை சுகுணாபுரம் பகுதியில் தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில், தனியார் கட்டுமான நிறுவன உரிமையாளர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

08:51 AM (IST) Jul 05

Tamilnadu Rain: உஷார் மக்களே! அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 25 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை..!

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் நெல்லை, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

 

07:59 AM (IST) Jul 05

Coimbatore: பிரபல தனியார் கல்லூரி காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து விபத்து.. பலி எண்ணிக்கை 5ஆக உயர்வு..!

கோவையில் தனியார் கல்லூரி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

07:36 AM (IST) Jul 05

வால்பாறை தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

07:21 AM (IST) Jul 05

Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதோ லிஸ்ட் இருக்கு பாருங்க..!

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தாம்பரம், கிண்டி, போரூர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

 

07:16 AM (IST) Jul 05

ஏழை குழந்தைனா அலட்சியமா? தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் லட்சணம் இதுதான்! இறங்கி அடிக்கும் ஜெயக்குமார்!

குழந்தையை பற்றி சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொறுப்பற்ற முறையில் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என ஜெயக்குமார் கூறியுள்ளார்.  

07:15 AM (IST) Jul 05

சென்னையில் 410வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னையில் 410வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


More Trending News