MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பட வாய்ப்புகள் குவியும் சமயத்தில்... திடீரென சினிமாவை விட்டு விலக முடிவெடுத்த சமந்தா - காரணம் என்ன?

பட வாய்ப்புகள் குவியும் சமயத்தில்... திடீரென சினிமாவை விட்டு விலக முடிவெடுத்த சமந்தா - காரணம் என்ன?

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் சமந்தா, சினிமாவை விட்டு தற்காலிகமாக விலக முடிவெடுத்துள்ளாராம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 05 2023, 01:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
samantha

samantha

நடிகை சமந்தாவுக்கு கடந்தாண்டு மிகவும் சோகமான மற்றும் கஷ்டங்கள் நிறைந்த ஆண்டாகவே அமைந்தது. ஏனெனில், கடந்தாண்டு இவருக்கு மயோசிடிஸ் என்கிற அரியவகை நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் 6 மாதங்கள் படாத பாடுபட்ட சமந்தா, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்த பின்னரே அதில் இருந்து படிப்படியாக மீண்டார். மயோசிடிஸ் நோய் பாதிப்பில் இருந்து மீண்ட பின்னர் சினிமாவில் மீண்டும் பிசியாகிவிட்டார் சமந்தா.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
samantha

samantha

அவர் நடிப்பில் தற்போது குஷி என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் சமந்தா. இப்படத்தை ஷிவா நிர்வாணா இயக்கி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வருகிற செப்டம்பர் மாதம் குஷி திரைப்படம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்ய உள்ளனர்.

இதையும் படியுங்கள்... வரிசையாக 4 பிரம்மாண்ட படங்கள்... விஜய், அஜித்தை ஓரங்கட்டி நம்பர் 1 இடத்தை பிடிக்க கமல் போட்ட மாஸ்டர் பிளான்

34
samantha

samantha

இதையடுத்து நடிகை சமந்தா நடிப்பில் சிட்டாடெல் என்கிற வெப் தொடரும் தயாராகி வருகிறது. இந்த வெப் தொடரை ராஜ் மற்றும் டீகே ஆகியோர் இணைந்து இயக்கி வருகின்றனர். இவர்கள் ஏற்கனவே சமந்தா நடித்த பேமிலி மேன்2 வெப் தொடரை இயக்கியவர்கள் ஆவர். இந்த வெப் தொடரில் பாலிவுட் நடிகர் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் சமந்தா. சிட்டாடெல் வெப் தொடரின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

44
samantha

samantha

இந்நிலையில், நடிகை சமந்தா குறித்த ஷாக்கிங் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி சிட்டாடெல் வெப் தொடரில் நடித்து முடித்த பின்னர் நடிகை சமந்தா சினிமாவில் இருந்து விலக முடிவெடுத்துள்ளாராம். இந்த முடிவு தற்காலிகமானது தானாம். இதனால் தற்போது படங்கள் எதிலும் கமிட் ஆகாமல் உள்ள சமந்தா, வரும் வாய்ப்புகளையும் நிராகரித்து வருகிறாராம். சுமார் ஓராண்டு காலத்துக்கு அவர் சினிமாவில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளாராம். இந்த ஓராண்டு காலத்தில் மயோசிடிஸ் நோய்க்கு சிகிச்சை எடுத்து முழுமையாக உடல் நலன் தேறிய பின்னரே மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஐடியாவில் சமந்தா உள்ளாராம்.

இதையும் படியுங்கள்... ஒரு மாஸ் ஸ்பீச் கேட்க எல்லாரும் ரெடியா? ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழா - அப்டேட் இதோ!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சமந்தா ரூத் பிரபு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Swetha Lakshman : படம் பிடிக்கலைனா நடுரோட்ல மொட்டை அடிச்சுக்கிறேன்: ரசிகர்களிடம் நடிகை ஓபன் சேலஞ்ச்
Recommended image2
OTT Crime Thriller Movies : கிரைம் த்ரில்லர் ரசிகர்களே நோட் பண்ணுங்க... ஜியோஹாட்ஸ்டாரில் இருக்கும் 5 தரமான மலையாள படங்கள்!
Recommended image3
OTT Movie : வீட்டில் போன் அடிக்குது! மறுமுனையில் பேசுவது பல வருடங்களுக்கு முன் வாழ்ந்த பெண்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved