எல்.சி.யூ.வில் தனுஷ்... திருப்பதியில் மொட்டை அடித்தது லியோ படத்துக்காக தானா? சர்ப்ரைஸ் அப்டேட் இதோ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நாயகனாக நடித்து வரும் லியோ திரைப்படத்தில் நடிகர் தனுஷ் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விக்ரம் படத்தின் மூலம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இந்திய சினிமாவின் பேவரைட் இயக்குனர் ஆகிவிட்டார். விக்ரம் படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றதற்கு அதில் அவர் பயன்படுத்திய எல்.சி.யூ கான்செப்ட் தான். விக்ரம் படத்திற்கும் கைதி படத்திற்கும் தொடர்பு படுத்திய அவர் செய்த விஷயங்கள் மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அதனால் அப்படத்தை ஹாலிவுட் ரேஞ்சில் இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். அதிலும் சூர்யாவின் ரோலெக்ஸ் கேமியோ வேறலெவலில் ரீச் ஆனது.
விக்ரம் படத்திற்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள திரைப்படம் தான் லியோ. இப்படம் எல்.சி.யூவில் வருமா வராதா என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக இருந்து வருகிறது. ஆனால் படக்குழு வட்டாரத்தில் இருந்து வெளிவரும் தகவல்படி இப்படம் நிச்சயம் எல்.சி.யூவில் இருக்கும் என்று தான் கூறப்படுகிறது. விக்ரம் படத்தில் சூர்யாவை ரோலெக்ஸ் என்கிற மிரட்டல் வில்லனாக கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்து மாஸ் காட்டியிருந்த லோகேஷ், லியோவில் யாரை நடிக்க வைக்க போகிறார் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
இதையும் படியுங்கள்... தாயாக மாறிய ‘குக் வித் கோமாளி’ மணிமேகலை... குழந்தையால் குஷியான ஹுசைன் - குவியும் வாழ்த்துக்கள்
அந்த எதிர்பார்ப்புக்கு தற்போது விடை அளிக்கும் விதமாக ஒரு சர்ப்ரைஸ் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், லியோ படத்தில் நடிகர் தனுஷ் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இது இன்னும் உறுதி செய்யப்படாவிட்டாலும், படக்குழு அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஒரு வேளை தனுஷ் மட்டும் இதற்கு ஓகே சொல்லிவிட்டால், சூர்யாவின் ரோலெக்ஸ் கதாபாத்திரம் போல் இதுவும் பேசப்படும் ஒரு கேரக்டராக இருக்கும் என கூறப்படுகிறது.
Dhanush
சமீபத்தில் நடிகர் தனுஷ் திருப்பதி கோவிலுக்கு சென்று அங்கு மொட்டை அடித்துக் கொண்டார். மொட்டை அடித்த பின் செம்ம மாஸ் கெட் அப்பில் காட்சியளித்த தனுஷ், இது அவரின் 50-வது படத்திற்கான கெட் அப் என்றும் கூறப்பட்டது. தற்போது லியோ படத்தில் நடிப்பது உறுதியானால் அதே மொட்டைத் தலை கெட் அப்புடன் தான் தனுஷ் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. அவரின் இந்த கெட் அப் வில்லன் ரோலுக்கு செமையா இருக்கும் என்பதால் லியோவில் தரமான சம்பவம் காத்திருக்கிறது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.
இதையும் படியுங்கள்... சாதி பார்த்து தான் வாய்ப்பளிக்கிறேனா? விமர்சனங்கள் குறித்து முதன்முறையாக மனம்திறந்த மாரி செல்வராஜ்