School Leave : தொடரும் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - முழு விபரம்
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் கேரளாவில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஒரு சில பகுதிகளில் மட்டும் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த கனமழையால் மாணவர்கள் பள்ளிக்கு செல்வது பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் குறிப்பிட்டு உள்ளனர்.
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில், அடுத்த சில நாட்களில் தமிழகத்தின் பலவேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால், குட்டநாடு தாலுகாவின் ஆறுகள், கால்வாய்கள், நீர்நிலைகள் உயர்ந்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இடுக்கி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஹரிதா குமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு, கோட்டயம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பத்தனம்திட்டா மாவட்டத்தில் திருவல்லா, மல்லப்பள்ளி தாலுகாவில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பெய்துவரும் கனமழை எதிரொலியாக நீலகிரி மாவட்டத்திலும் மழை பெய்துவருகிறது. தொடர் கனமழை காரணமாக உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Senthil Balaji Case : அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு.. நாளை பிற்பகல்.! எகிறும் எதிர்பார்ப்பு.!!