- Home
- Tamil Nadu News
- GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
தமிழகத்தை பொறுத்தவரை GEN Z எனப்படும் புதிய தலைமுறை வாக்காளர்கள் திமுக, அதிமுக என திராவிட கட்சிகளுக்கு மாற்றாக சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து வந்தனர். இப்போது விஜய்யின் தவெக பக்கம் GEN Z இளைஞர்கள் ஏராளமானோர் உள்ளனர்.

97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
தமிழகத்தில் S.I.R பணிகள் முடிவடைந்த நிலையில், 97 லட்சம் வாக்காளர்களை தேர்தல் ஆணையம் அதிரடியாக நீக்கியுள்ளது. இந்த நிலையில், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் GEN Z எனப்படும் புதிய தலைமுறை வாக்குகளை மொத்தமாக திமுக பக்கம் அள்ள வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டார்.
நம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்களா?
இது தொடர்பாக பேசிய முதல்வர் ஸ்டாலின், ''தமிழ்நாட்டின் 15 சதவீத வாக்காளர்களை, அதாவது 97 லட்சம் வாக்காளர்களை நீக்கி, வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்கள். இடம் பெயர்ந்தவர்கள் என்று மட்டும் சுமார் 66 லட்சம் பேரை நீக்கியிருக்கிறார்கள்.
நீக்கப்பட்ட 97 லட்சம் வாக்காளர்களில் நம் வாக்காளர்கள் இருக்கிறார்களா என கவனமாக பார்க்க வேண்டும். 168 தொகுதிகளில் 10 சதவீதத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளார்கள். இதை நாம் வாக்குச்சாவடி வாரியாக பார்க்க வேண்டும்.
இன்னும் விழிப்புணர்வு வேண்டும்
உதாரணமாக கும்மிடிப்பூண்டி தொகுதியின் முதல் வாக்குச்சாவடியில் 40 வாக்காளர்கள் நீக்கப்பட்டு உள்ளார்கள். நீக்கப்பட்ட அந்த 40 பேர்களில், 4 பேர் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு மூலமாக சேர்ந்தவர்கள். அதில் ஒருவர் இறந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்கள்.
அதேபோல, மத்த 3 பேரையும் எதற்காக நீக்கியுள்ளார்கள் என்று சரி பார்க்க வேண்டும். நாம் இவ்வளவு கவனமாக இருந்தும் -ஒரே வாக்குச்சாவடியில், ஓரணியில் தமிழ்நாட்டில் இணைந்த 4 பேர் விடுபட்டிருக்கிறார்கள் என்றால் நாம் இன்னும் விழிப்போடு செயல்பட வேண்டும் என அர்த்தம்!
சீரியஸாக எடுத்துக் கொள்ளுங்கள்
நீக்கப்பட்ட வாக்காளர்கள் இறந்துவிட்டார்களா, இடம் மாறிவிட்டார்களா. டபுள் எண்ட்ரியா என சரிபார்க்க வேண்டும். ஒரே ஒருத்தர் தவறுதலாக விடுபட்டு இருந்தால் கூட ஃபார்ம்-6 நிரப்பிக் கொடுத்து வாக்காளர் பட்டியலில் இணைக்க வேண்டும்.
நானே இவ்வளவு மைக்ரோ அளவில் பார்க்கிறேன் என்றால் நீங்க எல்லாரும் இதனை எவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டும் என புரிந்து கொள்ள வேண்டும். கவனமாக பார்த்து சரி செய்ய வேண்டியது - ஒவ்வொரு மாவட்டச் செயலாளர் -தொகுதி பார்வையாளர்கள் பொறுப்பு!
புதிய வாக்காளர்களை இணைக்க வேண்டும்
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நீக்கப்பட்டவர்கள் பட்டியலும் அதில் யாரெல்லாம் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர்கள் என்ற விவரமும் நாளைக்குள் மாவட்டச் செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விவரங்களை முழுமையாக சரிபார்த்து விடுபடல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
புதிய வாக்காளர்கள் இணைக்கப்படுவதையும் தொடர்ந்து கவனிக்க வேண்டும். போலிகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வாக்குச்சாவடிகளுக்கு. ஏற்கனவே நியமிக்கப்பட்டிருக்கும் BLA-2க்கள் தொடர்வதை உறுதி செய்ய வேண்டும்.
டெல்லி படையெடுப்புக்கு தமிழ்நாடு அஞ்சாது
புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் வாக்குச்சாவடிகள் அனைத்துக்கும் புதிய BLA-2 மற்றும் BLC பொறுப்பாளர்களை நியமிக்க வேண்டும்! நம் கவனத்தை திசைதிருப்பவும் - நம்மோட உழைப்பை வீணாக்கவும் எதிரிகள் கூட்டமும், வீணர்கள் கூட்டமும் முயற்சி செய்வார்கள். அதையெல்லாம் புறந்தள்ளி, தேர்தல் பணி ஆற்றுங்கள்.
வெற்றிக் கோட்டை நெருங்கும் நேரத்தில் பதற்றமோ -அசதியோ கூடாது. இனிமேதான் நம் முழு பலத்தையும் கொடுத்து ஓட வேண்டும். களத்தில் நாம்தான் வலிமையாக உள்ளோம். நம் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி. வெற்றியை எட்டும் வரைக்கும் கவனம் சிதறாமல் உழையுங்கள்! டெல்லி படையெடுப்புக்கு தமிழ்நாடு ஒருபோதும் அஞ்சாது! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடே வெல்லும்'' என்று தெரிவித்துள்ளார்.
விஜய் ஷாக்
தமிழகத்தை பொறுத்தவரை GEN Z எனப்படும் புதிய தலைமுறை வாக்காளர்கள் திமுக, அதிமுக என திராவிட கட்சிகளுக்கு மாற்றாக சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து வந்தனர். இப்போது விஜய்யின் தவெக பக்கம் GEN Z இளைஞர்கள் ஏராளமானோர் உள்ளனர்.
இதை உணர்ந்து கொண்ட திமுக அறிவுத்திருவிழா நடத்தியது மட்டுமின்றி மண்டல வாரியாக இளைஞரணி மாநாடாட்டையும் நடத்த உள்ளது. இப்போது புதிய தலைமுறை வாக்காளர்களை திமுக பக்கம் சேர்க்க வேண்டும் என ஸ்டாலின் பேசியிருப்பது விஜய்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

