- Home
- Politics
- மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
‘’இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என அனைவரும் இணைந்ததே தமிழ்நாடு. "மதத்தின் பெயரால் ஒருவர் உங்களது உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும். சிறுபான்மையினரை அச்சுறுத்தும் அரசாக மத்திய அரசு உள்ளது”

‘‘இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என அனைவரும் இணைந்ததே தமிழ்நாடு. "மதத்தின் பெயரால் ஒருவர் உங்களது உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும். சிறுபான்மையினரை அச்சுறுத்தும் அரசாக மத்திய அரசு உள்ளது” என முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.
திருநெல்வேலியில் நடைபெற்ற கிறிஸ்தவ மத விழாவில் பங்கேற்று பேசிய மு.க.ஸ்டாலின், ‘‘ கிறிஸ்மஸ் விழா என்பது நம்பிக்கையை விதைக்கக் கூடிய விழாவாக, பரிவு காட்டும் விழாவாக, அமைதிக்கு வழிகாட்டு விழாவாக, மகிழ்ச்சியை கொண்டாடும் விழாவாக இருக்கிறது. அதனால் தான் மதங்களைக் கடந்து அனைத்து மக்களும் கிறிஸ்துமஸ் நாளில் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறார்கள். அன்பு நெறியால், பண்பு நெறியால் வளர்ச்சி அடைவதற்கு தான் கொண்டாட்டங்கள் அடிப்படையாக இருக்க வேண்டும். வெறுப்புணர்ச்சி என்பது பாவங்களை தான் செய்ய தூண்டும். ஆனால், அன்பு என்பது அத்தனை பாவங்களையும் போக்கும்.
அப்படிப்பட்ட அமைதியான, அன்பான சமுதாயத்தை, சகோதரத்துவ உணர்வு மிக்க சமுதாயத்தை கட்டமைக்க வேண்டிய கடமை நம்ம எல்லோருடைய கடமையாக அமைந்திருக்கிறது. இதுதான் இன்றைய இந்தியாவுக்கு தேவை. இந்துக்களும், முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளாக வாழவேண்டும். அதற்கு இது போன்ற விழாக்கள் துணை நிற்க வேண்டும். எங்களுடைய அன்பிற்குரிய இனிய சகோதரர் பீட்டர் அல்போன்ஸ் பேசும்போது சொன்னார். எண்ணிக்கையில் அதிகமாக இருக்க பெரும்பான்மையினர் எப்பவுமே சிறுபான்மையினர் நலனை, அவர்களுடைய மாண்பை போற்றி பாதுகாக்க கூடியவர்கள்தான் மதச்சார்பு இணக்கத்தை விரும்புறவர்கள் என்றார்.
உங்களுக்கு துணையாக, பாதுகாப்பு அரணாக என்றைக்கும் இருப்பவன் என உறுதி அளிக்கத்தான் நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். அதன் அடையாளமாகத் தான் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த விழாவிலே பங்கு எடுத்திருக்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகம் தான் சிறுபான்பையினருக்கு உண்மையான அக்கறை கொண்டுள்ள இயக்கம். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி காலங்களில்தான் சிறுபான்மையினருக்கு நலடததிட்டங்களை நிறைவேற்றி கொடுத்திருக்கிறோம். இங்கே பேசியவர்கள் பலர் அதைப்பற்றி எடுத்துச் சொன்னார்கள். திராவிட மாடல் ஆட்சி வந்த பிறகு, பொறுப்பேற்ற பிறகே செய்யப்பட்டு இருக்கக்கூடிய திட்டங்களில் திராவிட மாடல் அரசு மாணவ, மாணவியர்கள் விடுதிகளில் தங்கி படிக்க ஆண்டு வருமான உச்சவரம்பையும், பல்வகை செலவினத் தொகையையும் உயர்த்தியிருக்கிறோம்.
திருநெல்வேலி, சிவகங்கை, மதுரை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கூடுதல் கிறிஸ்தவ மகளிர் உதவக்கூடிய சங்கங்களை உருவாக்கி தமிழ்நாட்டில் இருக்கிற 46 சங்கங்களுக்கு அரசு மானியமாக 13 கோடிய 86 லட்சம் வழங்க இருக்கிறோம். கல்வி நிறுவனங்களுக்கு 5000க்கு மேற்பட்ட நபர்களை உறுப்பினராக சேர்த்து இருக்கிறோம். திருநெல்வேலி, சிவகங்கை, மதுரை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கூடுதல் கிறிஸ்தவ மகளிர் உதவக்கூடிய சங்கங்களை உருவாக்கி தமிழ்நாட்டில் இருக்கிற 46 சங்கங்களுக்கு அரசு மானியமாக 13 கோடிய 86 லட்சம் வழங்க இருக்கிறோம்.
அடுத்து நம்முடைய சகோதரர் இனிகோ இருதயராஜ் கோரிக்கையை ஏற்று விருதுநகர், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி மற்றும் திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் புதிதாக கல்லறை தோட்டங்களை அமைக்க அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. திருநெல்வேலி, தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கல்லறை தோட்டங்களுக்கு 5 கோடி ரூபாய் நிதியை விடுவித்திருக்கிறோம்.
இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என அனைவரும் இணைந்ததே தமிழ்நாடு. "மதத்தின் பெயரால் ஒருவர் உங்களது உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும். சிறுபான்மையினரை அச்சுறுத்தும் அரசாக மத்திய அரசு உள்ளது” என தெரிவித்தார்.
