Asianet News TamilAsianet News Tamil

அமைச்சரோடு மாமன்னன் படம் பார்த்த திமுகவினர் ஓசியில் பாப்கார்ன் கேட்டு தகராறு; திரையரங்கில் அடிதடி

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைச்சர் கீதா ஜீவனுடன் மாமன்னன் படம் பார்க்கச் சென்ற திமுகவினர் திரையரங்கில் இனாமாக பாப்கார்ன் கேட்டு தகராறு செய்த நிலையில், அவர்கள் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

dmk cadres argument with theatre employees in middle of maamannan movie in thoothukudi
Author
First Published Jul 5, 2023, 12:51 PM IST

தூத்துக்குடி மாவட்டம் பாலகிருஷ்ணா திரையரங்கில் நேற்று முன்தினம் இரவு அமைச்சர் கீதா ஜீவன் பெயரை பயன்படுத்தி திமுக பகுதி செயலாளர் ஜெயக்குமார் மற்றும் திமுக நிர்வாகி வில்சன் ஆகியோர் தலைமையிலான திமுகவினர் அமைச்சர் உதயநிதி நடித்த மாமன்னன் திரைப்படத்தை ஓசியில் பார்த்ததாகக் கூறப்படுகிறது. மேலும் பட இடைவேளையின் போது ஓசியில் பாப்கான் கேட்டு திரையரங்க ஊழியர்களிடம் தகராறு செய்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து திரையரங்கிற்கு வந்த மத்திய பாகம் காவல்துறையினர் தகராறில் ஈடுபட்ட திமுகவினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது காவல்துறையினரிடம் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் காவல்துறையை மிரட்டும் தொணியில் பேசியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

திருச்செந்தூரில் 100 அடி உள்வாங்கிய கடல்; குளம் போல் காட்சி அளிப்பதால் பக்தர்கள் ஏமாற்றம்

இதைத் தொடர்ந்து மத்திய பாகம்  காவல்துறையினரை பணி செய்ய விடாமல் அவதூறான வார்த்தைகளால் பேசியது தொடர்பாக திமுக பகுதி செயலாளர் ஜெயக்குமார் மற்றும் திமுக நிர்வாகி வில்சன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மோதல் தொடர்பான வீடியோ காட்சிகளை கொண்டு மற்ற திமுக நிர்வாகிகளையும்  வழக்கில் சேர்க்கும் நடவடிக்கையில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மூலம் கல்லா கட்டும் தனியார் மருத்துவமனைகள் - களத்தில் இறங்கி அதிரடி காட்டிய அதிகாரி

Follow Us:
Download App:
  • android
  • ios