Asianet News TamilAsianet News Tamil

DMK : திமுக இளைஞரணியில் புதிய படை.! உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட பட்டியல் - புதிய நிர்வாகிகள் யார்?

தமிழ்நாடு முழுவதும் புதிய இளைஞரணி நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது திமுக.

Udhayanidhi Stalin released the list of DMK Youth Executives
Author
First Published Jul 5, 2023, 8:58 PM IST | Last Updated Jul 5, 2023, 8:58 PM IST

திமுகவின் சார்பு அணிகளில் பிரதான இடத்தில் இருப்பது அக்கட்சியின் இளைஞரணி. ஸ்டாலின் இளைஞரணிச் செயலாளராக இருந்தக் காரணத்தால் அந்த அணியின் செயல்பாடுகள், நடவடிக்கைகள் அனைத்தும் கட்சியினரால் உற்றுநோக்கி கவனிக்கப்பட்டு வருகின்றன. திமுக இளைஞரணி செயலாளராக தொடர்ந்து 4 ஆண்டுகளாக உதயநிதி ஸ்டாலின் செயல்பட்டுவருகிறார்.

Udhayanidhi Stalin released the list of DMK Youth Executives

தமிழ்நாடு முழுவதும் திமுக இளைஞரணி நிர்வாகிகள் பட்டியல் வெளியானது. உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “இளைஞர் அணியின் செயலாளராக 4 ஆண்டுகளை நிறைவுச் செய்து, 5-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த நேரத்தில் திமுக இளைஞரணியின் மாவட்ட-மாநகர அமைப்பாளர்/துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கான புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.  

பெரியார்-அண்ணா-கலைஞர்-பேராசிரியரின் கொள்கை வழியில் பயணித்து திமுக தலைவர் முக ஸ்டாலினின் கரத்தை வலுப்படுத்த தொடர்ந்து உழைப்போம். அனைவருக்கும் வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Senthil Balaji Case : அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு.. நாளை பிற்பகல்.! எகிறும் எதிர்பார்ப்பு.!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios