Tamilnadu Rain: உஷார் மக்களே! அடுத்த 3 மணிநேரத்தில் இந்த 25 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை..!
தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் நெல்லை, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கடுமையான வெயில் வாட்டி வதைத்தது. இதன் காரணமாக ஜூன் மாதம் பள்ளி திறப்பும் தள்ளிவைக்கப்பட்டது. பின்னர், கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்ததில் அடுத்த 3 மணிநேரத்தில் 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், தருமபுரி, சேலம், திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.