Asianet News TamilAsianet News Tamil

வாக்களித்த பொதுமக்களை கொச்சைப்படுத்துவது திமுகவுக்கு வாடிக்கையாக போச்சு! வேலுவுக்கு எதிராக சீறும் அண்ணாமலை.!

தென் மாவட்ட மக்கள் பொருளாதாரத்தை செலவு செய்யாமல் அலையாமல் சென்னைக்கு அடுத்து மதுரைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையை அமைத்து கொடுத்தது கருணாநிதி போட்ட பிச்சை என அமைச்சர் எ.வ.வேலு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

Annamalai condemns Minister EV Velu speech
Author
First Published Jul 5, 2023, 1:30 PM IST

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அமைந்ததுது கலைஞர் போட்ட பிச்சை என அமைச்சர் எ.வ.வேலு பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். 

மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் மதுரை அண்ணாநகர் பகுதியில் மாவட்ட செயலாளர் கோ. தளபதி தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு , தகவல்தொழில்நுட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய அமைச்சர் எ.வ வேலு;- எந்த தேர்தலிலும் தோற்காத ஒரே தலைவர் கருணாநிதி. 80 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை. 60 ஆண்டு கால சட்டமன்ற உறுப்பினர், 5 முறை முதலமைச்சராக இருந்தவர் கருணாநிதி ஒரு கட்சிக்கு 50 ஆண்டு கால தலைவராக இருந்து வரலாறு படைத்தவர் கருணாநிதி என்றார். 

Annamalai condemns Minister EV Velu speech

மேலும், தென் மாவட்ட மக்கள் பொருளாதாரத்தை செலவு செய்யாமல் அலையாமல் சென்னைக்கு அடுத்து மதுரைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையை அமைத்து கொடுத்தது கருணாநிதி போட்ட பிச்சை என அமைச்சர் எ.வ.வேலு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சரின் பேச்சுக்கு பலரும் கண்டங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,  மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை பிச்சைபோடுகிறோம் எனக்கூறி மக்களை கொச்சைப்படுத்துவதா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். 

 Annamalai condemns Minister EV Velu speech

இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- பட்டியல் சமூக மக்களுக்கு நீதிபதி பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை” என்றார் திமுகவின் அமைப்புச்செயலாளர் திரு ஆர்எஸ் பாரதி அவர்கள். 

"சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை அமைந்தது, கலைஞர் கருணாநிதி போட்ட பிச்சை" என்கிறார் அமைச்சர் திரு எ.வ. வேலு அவர்கள். 

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை, பிச்சை போடுகிறோம் என்று கூறி, வாக்களித்த பொதுமக்களைக் கொச்சைப்படுத்துவது, திமுகவினருக்கு வாடிக்கையாகிவிட்டது. 

தொடர்ந்து பொதுமக்களை அவமானப்படுத்தி வரும் திமுகவினரின் இது போன்ற அகங்காரமான பேச்சுக்களை தமிழக பாஜக சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன் என அண்ணாமலை கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios