அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமசந்திரனை சசிகலா இன்று சந்தித்துப் பேசினார். இது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- Home
- Tamil Nadu News
- TamilNews Highlights: அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனுடன் சசிகலா சந்திப்பு!
TamilNews Highlights: அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனுடன் சசிகலா சந்திப்பு!

அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமசந்திரனை சசிகலா இன்று சந்தித்துப் பேசினார். சென்னை அசோக் நகரில் உள்ள பண்ருட்டி ராமச்சந்திரன் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
பண்ருட்டி ராமச்சந்திரனுடன் சசிகலா திடீர் சந்திப்பு
பேன்ட் போடாமல்... சல்லி சல்லியாய் நொறுங்கிய கண்ணாடியை டாப்பாக அணிந்து கவர்ச்சி விருந்து வைக்கும் யாஷிகா!
நடிகை யாஷிகா ஆனந்த் உடைந்து போன கண்ணாடிகளை ஓட்ட வைத்து உடையாய் அணிந்து, கவர்ச்சி விருந்து வைத்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் பார்க்க....
பேரறிவாளனுடன் செம்ம குத்தாட்டம் போட்ட சத்யராஜ் - வைரலாகும் வீடியோ! பறக்கும் விமர்சனங்கள்...
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை குற்றவாளிகளில் ஒருவராக கைது செய்யப்பட்டு, விடுதலை ஆகியுள்ள பேரறிவாளன் தன்னுடைய பெற்றோர் பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடிய நிலையில், அந்த விழாவில் நடிகர் சத்யராஜ் பங்கேற்று, பேரறிவாளனுடன் குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பார்க்க....
சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் கைது
நில மோசடி வழக்கில் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
அலர்ட் !! தொடர்ந்து 5 நாட்களுக்கு கனமழை.. இன்று 5 மாவட்டங்களில் மிக கனமழை.. வானிலை அப்டேட்
தமிழகத்தில் தொடந்து 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தருமபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர் மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
டெல்லி காவல் ஆணையர் - சஞ்சய் அரோரா நியமனம்
தமிழ்நாடு காவல்துறை கேடரைச் சேர்ந்த சஞ்சய் அரோரா டெல்லி காவல் ஆணைய்ராக நியமிக்கப்பட்டுள்ளார். டிஜிபி அந்தஸ்தில் உள்ள சஞ்சய் அரோரா மத்திய அரசு பணிக்கு சென்ற நிலையில் தற்போது டெல்லி காவல் ஆணையராக அறிவித்து மத்திய உள்துறை அறிவித்துள்ளது.
அலர்ட்!! நர்சிங், பி.பார்ம் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.. எப்படி விண்ணப்பது..? கூடுதல் விவரம்..
நாளை முதல் நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட மருத்துவ துணைப் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடிக்க மறுத்ததால் முக்கிய அந்தஸ்தை இழந்து தவிக்கும் நயன்தாரா
லெஜண்ட் படம் ஆரம்பிக்கப்பட்ட சமயத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடிக்க நடிகை நயன்தாராவை தான் முதலில் அணுகினர். ஆனால் அவரோ எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் அவருடன் நடிக்க மாட்டேன் என கறாராக கூறிவிட்டாராம் நயன். இதையடுத்து தான் பாலிவுட்டில் இருந்து ஊர்வசி ரவ்துலாவை களமிறக்கிய அண்ணாச்சி, அவருக்கு ரூ.20 கோடி சம்பளமாக கொடுத்து, கோலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கிய நடிகை என்கிற அந்தஸ்தையும் பெற வைத்துள்ளார்.மேலும் படிக்க
நர்சிங் மாணவி கல்லூரி விடுதியில் தற்கொலை - சிபிசிஐடிக்கு மாற்றம்
நர்சிங் மாணவி கல்லூரி விடுதியில் தற்கொலை செய்துகொண்டவழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நேற்று காலை வகுப்பிற்கு சென்று விட்டு மதிய உணவிற்கு தோழிகளுடன் வந்தவர் தோழிகளை சாப்பிட செல்லுமாறு கூறிவிட்டு அறைக்குள் இருந்துள்ளார்.நீண்ட நேரம் ஆகியும் அந்த மாணவி வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது தோழிகள் மேலே சென்று பார்த்தபோது கதவு உள்பக்கமாக சாத்தப்பட்டு கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்து ஜன்னல் வழியாக பார்த்தபோது சுமதி தற்கொலை செய்துகொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தமிழ்நாட்டில் மதக்கலவரங்கள் நிகழவில்லை.. துப்பாக்கிச்சூடு இல்லை.. காவல்துறையை பாரட்டிய முதல்வர்
திமுக பொறுப்பேற்ற கடந்த ஓராண்டில் மதக்கலவரங்களோ, ஜாதி மோதல்களோ, மக்களைப் பீதிக்குள்ளாக்கக்கூடிய குற்ற நிகழ்வுகளோ இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.துப்பாக்கிச் சூடு இல்லை, கள்ளச்சாராயச் சாவுகளும் இல்லை. காவல்நிலைய மரணங்கள் குறைந்துள்ளன என்று பேசினார்.மேலும் படிக்க
டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் ஆதரவாளர் வரவேற்பு
தேனி மாவட்டத்திற்கு வந்த டி.டி.வி.தினரனுக்கு மாவட்ட எல்லையான ஆண்டிபட்டி கணவாய் பகுதியில் அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளரும், ஒபிஎஸ் அணியைச் சேர்ந்தவருமான எஸ்.பி.எம்.சையதுகான் தலைமையில் வரவேற்பு அளித்தனர்.

ரீல் மற்றும் ரியல் நம்பி நாராயணனை நேரில் அழைத்து பாராட்டிய ரஜினி! காலில் விழுந்து ஆசிபெற்ற மாதவன்
நடிகர் மாதவன் மற்றும் நம்பி நாராயணன் ஆகியோரை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது இருவருக்கும் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார் ரஜினிகாந்த். இதனால் மிகுந்த உற்சாகமடைந்த நடிகர் மாதவம் நடிகர் ரஜினிகாந்தின் காலில் விழுந்து ஆசி பெற்றார். இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க
புதுக்கோட்டை அருகே தேர் கவிழ்ந்து 6 பேர் காயம்
புதுக்கோட்டை அருகே திருக்கோகர்ணத்தில் தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 6 பக்தர்கள் காயமடைந்தனர். காயமடைந்த 6 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கவிழ்ந்த தேரை நிமிர்த்தி, சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆடிப்பூரத்தை முன்னிட்டு கோகர்ணேஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.
பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நாளை முதல் செயலியில் வருகைப்பதிவு
பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நாளை முதல் செயலியில் வருகைப்பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பதிவேட்டில் வருகையை பதிவு செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் TNSED செயலியில் மட்டுமே மாணவர்களின் வருகை, ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்பட வேண்டும். அதே போல் விடுப்பு, தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, முன் அனுமதி உள்ளிட்டவற்றையும் ஆசிரியர்கள் இனி செயலி வழியாகவே மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தனுஷ் இல்லேனா நான் இல்ல - அனிருத் உருக்கம்
திருச்சிற்றம்பலம் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அனிருத், “உள்ள வந்ததும் FDFS பாக்குற மாதிரி இருந்துச்சு. 2010-ல் ஒரு நாள் சோகமா உக்காந்து தனுஷ்ட பேசிட்டு இருந்தேன். அப்போ அவர், நீ வேணா பாருடா, இன்னும் 10 வருஷத்துல நீ எந்த இடத்துல இருக்கேனு சொன்னாரு. அது நடந்துருச்சு. DnA-னு சொல்றாங்க, D இல்லேனா இந்த A இல்ல” என உருக்கமாக பேசிய அனிருத், ரசிகர்களுக்காக பாடல்களை பாடி அசத்தினார்.மேலும் படிக்க

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தான் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். அறிகுறிகள் எதுவும் இல்லாததால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு இருக்கும் அவர், அடுத்த சில நாட்களுக்கு வீட்டில் இருந்தபடியே பணிகளை மேற்கொள்ளஉள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தி தெரியாதவன்லாம் இந்தி படம் எடுக்குறான்.... அட்லீயை மறைமுகமாக விமர்சித்த பாலிவுட் பிரபலம்
தென்னிந்திய படங்களோடு ஒப்பிடுகையில் பாலிவுட் படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவுவது ஏன் என அனுராக் கஷ்யப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அனுராக், இங்கு இந்தி தெரியாதவர்கள் எல்லாம் இந்தி படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் தென்னிந்தியாவில் அவ்வாறு நடப்பது இல்லை என அனுராக் கஷ்யம் கூறி உள்ளார். இதன்மூலம் அவர் அட்லீயை மறைமுகமாக தாக்கி பேசியதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் படிக்க
காமன்வெல்த் போட்டியில் சாதித்த மீராபாய் சானு, பிந்தியா ராணிக்கு பிரதமர் மோடி பாராட்டு
காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதலில் தங்கம் வென்ற மீராபாய் சானுவுக்கும், வெள்ளி வென்ற பிந்தியா ராணிக்கும் பிரதமர் மோடி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மீராபாய் சானுவின் வெற்றி வளரும் தடகள வீரர்களுக்கு உத்வேகமாக அமையும். அவரின் விடாமுயற்சியின் வெளிப்பாடு தான் இந்த சாதனை. ஒவ்வொரு இந்தியரையும் இது மகிழ்ச்சியடைய செய்துள்ளது என மோடி தெரிவித்துள்ளார்.
‘வட சென்னை 2’ எப்போ தொடங்கும்? - வெற்றிமாறன் வெளியிட்ட மாஸ் அப்டேட்
தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வெற்றிமாறன் வட சென்னை படத்தின் 2-ம் பாகத்திற்கான ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதன்படி விடுதலை மற்றும் சூர்யாவின் வாடிவாசல் ஆகிய படங்களின் ஷூட்டிங்கை முடித்த பின் வட சென்னை படத்தை தொடங்க உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.மேலும் படிக்க
காசிமேடு மீன் மார்க்கெட்டில் அலைமோதும் மக்கள் கூட்டம்
காசிமேடு மீன் மார்க்கெட்டில் அலைமோதும் அசைவப் பிரியர்கள் கூட்டம். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் வாங்க அசைவ பிரியர்கள் ஆர்வம். மீன்களின் விலையும் கடந்த வாரத்தை விட இந்த வாரம் ரூ.50 முதல் ரூ.200 வரை குறைந்துள்ளது.