இந்தி தெரியாதவன்லாம் இந்தி படம் எடுக்குறான்.... அட்லீயை மறைமுகமாக விமர்சித்த பாலிவுட் பிரபலம்
Anurag Kashyap : பாலிவுட் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அனுராக் கஷ்யப், இந்தி தெரியாதவன்லாம் இந்தி படம் எடுக்குறான் என்று சொன்னது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
பாலிவுட்டில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அனுராக் கஷ்யப். இவர் தமிழிலும் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவுக்கு வில்லனாக நடித்து அசத்தியவர் ஆவார். இவர் சமீபத்திய பேட்டியில் இந்தி தெரியாதவன்லாம் இந்தி படம் எடுக்குறான் என்று சொன்னது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அந்த பேட்டியில் தென்னிந்திய படங்களோடு ஒப்பிடுகையில் பாலிவுட் படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவுவது ஏன் என அனுராக் கஷ்யப்பிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அனுராக், இங்கு இந்தி தெரியாதவர்கள் எல்லாம் இந்தி படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் தென்னிந்தியாவில் அவ்வாறு நடப்பது இல்லை.
இதையும் படியுங்கள்... செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவிற்கு குரல் கொடுத்த கமல்ஹாசன்... நன்றி சொன்ன விக்னேஷ் சிவன்
அது அவர்களின் கலாச்சாரத்தோடு ஒன்றியே இருக்கிறது. வேறு மொழி பேசுபவர்கள் இந்தியில் படம் எடுப்பதனால் அது இங்குள்ள மக்களின் கலாச்சாரத்தோடு ஒன்றுவதில்லை. இந்த நிலை மாற வேண்டும். அது மாறினால் தான் இந்தி படங்களுக்கு வெற்றி கிடைக்கும் என அனுராக் கஷ்யப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது இயக்குனர் அட்லீ பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் என்கிற இந்தி படத்தை இயக்கி வருகிறார். இவரைத் தான் அனுராக் கஷ்யப் மறைமுகமாக தாக்கி பேசியதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் ஜெய் பீம் இயக்குனரும் விரைவில் தோசா கிங் என்கிற இந்தி படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ‘வட சென்னை 2’ எப்போ தொடங்கும்? - திருச்சிற்றம்பலம் இசை வெளியீட்டு விழாவில் வெற்றிமாறன் சொன்ன மாஸ் அப்டேட்