இது குறித்தான உரையாடலை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். அதில் இருவரும் தொடக்க நிகழ்விற்கான விளக்க காட்சியை பற்றி விவாதிக்கின்றனர்.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் கோலாகலமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழக அரசின் அழைப்பை ஏற்று பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டிருந்தார். மேலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

 தொடக்க விழாவில் கோலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.. முன்னதாக வரவேற்பு கீதத்தையும் தான் இயக்கி இருந்தார். தமிழக முதல்வர் நடித்திருந்த இந்த காணொளிக்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். தொடக்க விழாவில் மாநிலங்களின் பாரம்பரிய இடம் பெற்ற ஒரு பிரிவு பலரின் கவனத்தை ஈர்த்தது. உலகநாயகியின் கமலஹாசன் இந்த விழா காட்சிக்கு குரல் கொடுத்திருந்தார்.

மேலும் செய்திகளுக்கு...கிளாமருக்கு தாவிய பிரியா பவானி சங்கர்...குட்டை டவுசரில் கலக்கல் ஹாட் போஸ்..

YouTube video player

இது குறித்தான உரையாடலை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். அதில் இருவரும் தொடக்க நிகழ்விற்கான விளக்க காட்சியை பற்றி விவாதிக்கின்றனர். அந்த வீடியோவுடன் விக்கி பகிர்ந்த பதிவில் உலகநாயகனுடன் நான் செலவழித்த சில மணி நேரங்கள். அவருடைய அறிவும் விளக்கமும் அவர் சேர்ந்த நுணுக்கங்களும் அவருடன் நான் இந்த குறிப்பிட்ட அமர்வும் எனக்கு மறக்க முடியாதது சிறந்த தருணங்கள். அவரது குரல் இந்த செயலில் எல்லா மாற்றத்தையும் ஏற்படுத்தியது நன்றி கமல் சார் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...'மாணவிகள் மரணம்..மாநில அரசுக்கு அவமானம்’ - அதிரடி காட்டிய இயக்குநர் அமீர்

View post on Instagram

மேலும் செய்திகளுக்கு...கணவருக்கு பாதபூஜை செய்த போட்டோவை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிய சூர்யா பட நடிகை

கடந்த ஜூலை 9ஆம் தேதி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை கரம்பிடித்த இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு திருமண பரிசோடு சேர்த்து ஒலிம்பியாட் 2022 - வை இயக்கும் வாய்ப்பும் கிடைத்திருந்தது,. திருமணம் முடிந்த தாய்லாந்து தேனிலவிற்கு சென்ற இவர்களின் புகைப்படங்கள் வைரலானது. திரும்பி வந்த கையோடு ஒலிம்பியாட் இயக்க விழாவில் இறங்கிவிட்டார் இயக்குனர் விக்னேஷ் சிவன். நேற்று துவக்க விழா நிறைவடைந்தது அடுத்தது இது குறித்தான வீடியோக்களையும், ரஜினி உள்ளிட்டோரின் பாராட்டிடுகள் குறித்தும் சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார் விக்கி.