கிளாமருக்கு தாவிய பிரியா பவானி சங்கர்...குட்டை டவுசரில் கலக்கல் ஹாட் போஸ்..
முன்னதாக சுடிதார், தாவணி, சேலையில் உலா வந்த இவர் பிரபல நடிகையாக முன்னணி நாயகர்களுடன் கமிட்டாகி வருவதை அடுத்து மற்ற நாயகிகள் போலவே கிளாமர் போஸ் கொடுத்து வருகிறார்
Priya Bhavani Shankar
விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை தொடர் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். அந்த நாடகத்தை தொடர்ந்து . சினிமா வாய்ப்பு பெற்றார் இவர் வைபவுக்கு ஜோடியாக மேயாத மான் படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த பெண் அறிமுகதிற்காக சைமா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.
Priya Bhavani Shankar
இதையடுத்து எஸ்.ஜே சூர்யாவின் மாஸ்டர் படத்தில் நாயகியாக வந்த இவர், நடிகர் கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நாயகிகளில் ஒருவராகவும், அதோடு 2020ல் மாஃபியா அத்தியாயம் மற்றும் டைம் என்ன பாஸ் என்னும் வெப் தொடரில் நடித்திருந்தார். மேலும் ஜீவா மற்றும் அருள்நிதியுடன் களத்தில் சந்திப்போம், கசடதபற, ஓ மணப்பெண்ணே உள்ளிட்ட படங்களில் தோன்றியிருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...'மாணவிகள் மரணம்..மாநில அரசுக்கு அவமானம்’ - அதிரடி காட்டிய இயக்குநர் அமீர்
Priya Bhavani Shankar
தற்போது அருண் விஜயுடன் யானை படத்தில்நாயகியாக வந்த பிரியா பவானிக்கு பாராட்டுக்கள் குவிந்தன. தற்போது இரண்டாவது முறையாக மீண்டும் எஸ்ஏ சூர்யாவுடன் பொம்மை, அசோக் செல்வனுக்கு ஜோடியாக ஹாஸ்டல் ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ளார் பிரியா பவானி சங்கர். இத்துடன் தனுஷ் தற்போது நடித்து முடித்துள்ள திருச்சிற்றம்பலத்தில் ரஞ்சனியாக தோன்றியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...கணவருக்கு பாதபூஜை செய்த போட்டோவை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிய சூர்யா பட நடிகை
Priya Bhavani Shankar
மேலும் ஜெயம் ரவிக்கு நாயகியாக அகிலன், லாரன்ஸின் ருத்ரன், சிம்புவின் பத்து தல, உலக நாயகன் கமலஹாசனின் இந்தியன் 2 ஆகிய படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார். சின்னத்திரையில் இருந்து திரைப்படம் வெப் சீரிஸ் என டாப் டென் ஹீரோயினி ஆகியாகவிட்ட இவர் தற்போது தன் உடையை குறைத்து கிளாமருக்குள் இறங்கி உள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...தனுஷ் வீட்டில் விசேஷம்...குடும்பத்துடன் இணைந்து கொண்டாடிய.....வைரல் போட்டோஸ் இதோ!
Priya Bhavani Shankar
அதன்படி தற்போது குட்டை டவுசர் அணிந்து அவர் கொடுத்துள்ள போஸ் வைரல் ஆகி வருகிறது. சிவப்பு வண்ண கட்டம் போட்ட மேல் சட்டை , குட்டை ஜீன்ஸ் டாப் உடன், அமர்ந்தபடி குனிந்தும் வளைந்தும் மாஸ் போஸ் கொடுத்துள்ளார் ப்ரியா பவானி. லூஸ் ஹேர் விட்டு கண்ணாடி மட்டும் அணிந்து அவர் கொடுத்துள்ள போட்டோ சூட் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
Priya Bhavani Shankar
முன்னதாக சுடிதார், தாவணி, சேலையில் உலா வந்த இவர் பிரபல நடிகையாக முன்னணி நாயகர்களுடன் கமிட்டாகி வருவதை அடுத்து மற்ற நாயகிகள் போலவே கிளாமர் போஸ் கொடுத்து வருகிறார்.