'மாணவிகள் மரணம்..மாநில அரசுக்கு அவமானம்’ - அதிரடி காட்டிய இயக்குநர் அமீர்
பள்ளி மாணவிகள் தொடர் மரணத்திற்கும் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மாநில அரசுக்கு மிகப்பெரிய தலைகுனிவு ஏற்படும் என கூறியுள்ளார்.
Ameer
விக்ரமின் சேது படத்தில் கல்லூரி மாணவராக திரையில் தோன்றிய அமீர், சேது மற்றும் நந்தா ஆகிய படங்களில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். மௌனம் பேசியதே படத்தின் மூலம் இவர் இயக்குனராக முதல் உருவாக்கத்தை கொடுத்தார். சூர்யா நடித்த இந்த படத்தில் லைலா நாயகியாக நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து ஜீவாவின் ராம், கார்த்தியின் பருத்திவீரன் உள்ளிட்ட படங்கள் இவருக்கு பாராட்டுகளை பெற்றுக் கொடுத்தது.
மேலும் செய்திகளுக்கு...கணவருக்கு பாதபூஜை செய்த போட்டோவை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிய சூர்யா பட நடிகை
Ameer
கார்த்தியின் முதல் படமான பருத்திவீரன் இன்றுவரை பேசும் படமாக உள்ளது. அமீர் படத்தில் நடிகராக தோன்றியவருக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும் கிடைத்தது.இயக்குதலை விட நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் இவர் சமீபத்தில் தனுஷின் மாறன் படத்தில் தோன்றி இருந்தார். இந்நிலையில் இவர் தமிழகத்தில் நடைபெறும் தொடர் மாணவிகள் மரணம் குறித்து பேசி இருப்பது வைரல் ஆகி வருகிறது.
மேலும் செய்திகளுக்கு...சாவு வண்டிக்கு புது அர்த்தம் சொன்ன கிருத்திகா உதயநிதி..
ameer
புதுச்சேரியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அமீர், பள்ளி மாணவிகள் மரணம் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இது மாநில அரசுக்கு பெருத்த அவமானம். திமுக அதிமுக என எந்த கட்சி இருந்தாலும் இதே நிலைமை தான் தொடர்கிறது. இதனை பிரித்து பார்க்க வேண்டிய அவசியமில்லை. பள்ளி மாணவிகள் தொடர் மரணத்திற்கும் தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மாநில அரசுக்கு மிகப்பெரிய தலைகுனிவு ஏற்படும்.
மேலும் செய்திகளுக்கு...தனுஷ் வீட்டில் விசேஷம்...குடும்பத்துடன் இணைந்து கொண்டாடிய.....வைரல் போட்டோஸ் இதோ!
பள்ளி நிர்வாகத்தின் மீது எடுக்கும் நடவடிக்கைகளை விட போராட்டக்காரர்கள் மீது எடுக்கும் நடவடிக்கையை அதிகமாக உள்ளது என கூறியுள்ளார். அதோடு ஒலிம்பியாட் போட்டி பற்றிய பேசியவர், தமிழகத்தில் ஒலிம்பியாட் சிறப்பான முறையில் நடந்து வருகிறது. இதற்காக தமிழக அரசுக்கும் போட்டியில் பங்கேற்றுள்ள வீரர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.