Asianet News TamilAsianet News Tamil

அலர்ட்!! நர்சிங், பி.பார்ம் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.. எப்படி விண்ணப்பது..? கூடுதல் விவரம்..

நாளை முதல் நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட மருத்துவ துணைப் படிப்புகளுக்கு  மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Admission Application Start for tomorrow for paramedical courses like Nursing, b pharm
Author
Tamil Nadu, First Published Jul 31, 2022, 3:34 PM IST


நாளை முதல் நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட மருத்துவ துணைப் படிப்புகளுக்கு  மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ சார்ந்த படிப்புகளில் சேர நாளை முதல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்கம் தெரிவிக்கலாம். மேலும் www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு முக்கிய செய்தி.. நாளை முதல் பள்ளிகளில் இது கட்டாயம்.. புது உத்தரவு

2022- 2023 ஆம் கல்வி ஆண்டில் Diploma In Nursing, Diploma In Psychiartic, B.SC Nursing, B.Pharm  ஆகிய மருத்துவம் சார்ந்த துணைப்படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று அறிவித்துள்ளது.  மேலும் மாணவர்கள் விண்ணப்பத்தினைப் பதிவேற்றம் செய்ய வேண்டிய அனைத்து விவரங்களுக்கும் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை அணுகும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 10 மணி முதல் ஆகஸ்ட் 12 ஆம் தேதி மாலை 5 மணி வரை மாணவர்களை துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேலும் படிக்க:மாணவர்களே அலர்ட்!! நாளை தரவரிசைப்பட்டியல் வெளியீடு..பிடித்த கல்லூரியை தேர்ந்தெடுப்பது எப்படி..?

Follow Us:
Download App:
  • android
  • ios