ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு முக்கிய செய்தி.. நாளை முதல் பள்ளிகளில் இது கட்டாயம்.. புது உத்தரவு
பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நாளை முதல் செயலியில் வருகைப்பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜூன் 13 ஆம் தேதி கோடை விடுமுறைக்கு பிறகு ஒன்று முதல் 10 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. 11 ஆம் வகுப்பிற்கு ஜூன் 27 ஆம் தேதியும் 12 ஆம் வகுப்பிற்கு ஜூன் 20 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. கடந்த 2 ஆண்டுகளுக்கு இந்த முறை தான் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கடந்த மே மாதம் நடத்தப்பட்டன. மேலும் ஜூன் 20 ஆம் தேதி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்டன.
கொரோனா தொற்று காரணாமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் மூடப்பட்டு, ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் கடந்த பிப்ரவரி மாதம் மெல்ல குறைய தொடங்கியது. அதனை தொடந்து, கொரோனா முன்பு வழக்கமான முறையில் பள்ளிகளில் நேரடி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, 2022 - 23 ஆம் ஆண்டிற்கான முதல் பருவத் தேர்வுகள் குறித்தான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.
மேலும் படிக்க:பரபரப்பு !! மீண்டும் ஒரு தேர் விபத்து.. அப்படியே சரிந்து விழுந்த கோவில் தேர்.. காரணம் இது தான்.. வெளியான தகவல்
அதன்படி தமிழகத்தில் 6 முதல் 10-ம் வகுப்பு வரை ஆகஸ்ட் 5 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. மேலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 4 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருந்தது. இதனிடையே தற்போது வருகைப் பதிவு குறித்து புதிய அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நாளை முதல் செயலியில் வருகைப்பதிவு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நாளை முதல் TNSED செயலியில் மட்டுமே மாணவர்களின் வருகை, ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்பட வேண்டும். பதிவேட்டில் வருகையை பதிவு செய்யக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க:அதிர்ச்சி.. மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு.. ஒரே நாளில் 3 ஆசிரியர்கள் கைது..
விடுப்பு, தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, முன் அனுமதி உள்ளிட்டவற்றையும் ஆசிரியர்கள் இனி செயலி வழியாகவே மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் பள்ளித் தரவை உள்ளிடவும், அதைக் கண்காணிக்கவும் ஆசிரியர்கள், பள்ளித் தலைவர்கள் மற்றும் பிற நிர்வாகப் பணியாளர்களால் இந்த செயலி பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.