பரபரப்பு !! மீண்டும் ஒரு தேர் விபத்து.. அப்படியே சரிந்து விழுந்த கோவில் தேர்.. காரணம் இது தான்.. வெளியான தகவல்
புதுக்கோட்டை அருகே திருக்கோகர்ணத்தில் தேர் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 6 பக்தர்கள் காயமடைந்தனர். காயமடைந்த 6 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கவிழ்ந்த தேரை நிமிர்த்தி, சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு ஆடிப்பூரத்தை முன்னிட்டு கோகர்ணேஸ்வரர் கோவிலில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோயில் தேரோட்டம் இன்று நடைபெற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடைபெற்றதால், இதில் ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில்,கோவில் தேரையை நிலையத்திலிருந்து இருந்து இழுக்க தொடங்கிய சிறிது நேரத்தில் திடீரென முன்பக்கமாக கவிழ்ந்து தேர் விபத்துக்குள்ளானது. இதில் தேருக்கு அருகில் இருந்த 10 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்நிலையில் பாதுகாப்பு பணியில் இருந்து காவல்துறையினர்., காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும் படிக்க:அதிர்ச்சி.. மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு.. ஒரே நாளில் 3 ஆசிரியர்கள் கைது..
தேர் முன்பக்கமாக சரிந்து விழுந்ததில், இதனைப் பார்த்த பொதுமக்கள் அலறி அடித்தபடி ஓடினர். மேலும் தேரின் வடத்தை வேகமாக பிடித்து இழுத்ததால், சாய் தளத்தில் இருந்து சறுக்கி முன்பக்கமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன. இருப்பினும், தேர் விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தேரோட்டத்தின்போது தேர் கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக தஞ்சாவூர் அருகே உள்ள களிமேடு கிராமத்தில் ஏப்ரல் 27 ஆம் தேதி இரவு நடைபெற்ற தேர்த் திருவிழாவில், மின்சாரம் தாக்கி மூன்று சிறுவர்கள் உட்பட 11 பேர் பலியாகினர். இதில் 17க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.